பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

தமிழ்ச் செல்வம்


வாழும்?... இறுதியாக வந்த தமிழ்ப் புலவன் பாரதிகூடச் சொன்னான்...

வேறு வேறு பாஷைகள் கற்பாய்,ே வீட்டுப் பாஷை கற்கிலாய் போ...போ...போ என்று விரட்டினான் பாரதி...ஏது பயன்? தமிழர் களாகிய நீங்கள் இன்னும் உங்கள் வீட்டு மொழியைத்தானே விரட்டியடிக்கிறீர்கள்!

நீங்க சொல்றதைக் கேக்க கொஞ்சம் வெக்கமாகத்

தான் சார் இருக்கு... தப்புத்தான் பாபு எனக்கு சாதாரணமாகப் படிக்க வரும்; இந்தக் கவி கிவீண்ணு வந்துட்டா கொஞ்சம் தகராறுதான். ஒன்னும் புரியற தில்லை... பிற மொழிகளைப் படித்துப் புரிந்துகொள்ளும் உங்களுக்கு, உங்கள் மொழி புரியவில்லையென்பது இன்னும் தலை குனியவேண்டிய செய்தி. நீங்கள் முயற்சிக்கவில்லை; அது மொழியின் குற்றமல்ல.

உலகில் எந்த நாட்டிலும், எந்த மொழியிலும் எந்தப் புலவனாலும், இன்றைக்கும் கூறப்படாத பல உயர்ந்த கருத்துக்களை, நமது மொழியில், நமது புலவர்கள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார்கள். அக்கருத்துக்கள் ஒவ்வொன்றும் இலட்சம் பொன் பெறும், சுருங்கக்

கூறவேண்டுமானால், நமது தமிழே ஒரு செல்வம்'

எனக் கூறலாம்.

ஆங் : அப்படியா! இரண்டொன்றைக் கூறுங்கள் பார்க்

கலாம்.

தமி இதோ கூறுகிறேன் பாருங்கள் ...

(திருக்குறளைக் கையில் எடுக்கிறார். திரை விழு

கிறது.)