பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்

புறநானுTறு

காட்சி : 1

சோழ நாடு, கரிகால் மன்னரது அரண்மனை

வாயில் காப்போன் : அரசே, வணக்கம்...... தங்களைப்

பார்க்க யாரோ இரண்டு பெரியவர்கள் வந்திருக் கிறார்கள்.

கரிகாலன் : எங்கே?...வரச்சொல்.

4;

[இருவரையும் அழைத்து வருகிறான் வாயிற்

காப்போன்.)

அரசே, வணக்கம்! வாருங்கள்... அமருங்கள்... உங்களுக்கு என்ன வேண்டும்? (மற்றவரைத் தனியே அழைத்து) நண்பரே மன்ன ரைப் பார்த்திரோ...!

பார்த்தேன். மிகவும் சிறுவயதினராய்த் தோன்றுகிறாரே! ஆமாம்...அதனால் என்ன?

இல்லை. நம் வழக்கைத் தீர்க்கும் அனுபவமும் ஆற்றலும் இவர்க்கு இருக்குமா என்றுதான் சிந்திக் கிறேன். - எனக்கும் சந்தேகமாகத்தான் இருக்கிறது. என்ன இருந்தாலும் மன்னரல்லவா? பரம்பரைப் பண்பு மறைந்துவிடுமா? எனக்கு என்னமோ அவ்வளவு நம்பிக்கை இல்லை. பேசாமல் திரும்பிச் செல்வதே மேல் என்று எண்ணு கிறேன். -