பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

தமிழ்ச் செல்வம்


கா : செங்கெல்லும் தேன்கரும்பும்.

சீனிவெல்லம் கற்கண்டும், பண்கலங்து விளைவிப்பார் - கிளியே பால்வார்க்கும் கைகளினால்.

&停 * மிகுந்த சுவை! மிகுந்த சுவை!...நகரச் சிறப்பு?

கா : சாவகத்தார், பாரசீகர்

ஜப்பானியர், சீனர், நேப்பாள், உரோமர், யவனர் பிறர் - கிளியே!

உவந்துவந்து வாழ்ந்ததிங்கே. க வீரம்

&#ff i கலிங்கத்தைச் சிங்களத்தைக்

கடல்சூழ்ந்த சிங்கை, ஜாவா பர்மாவை ஆண்டுவந்தார் - கிளியே! * , பார்புகழ்ந்த தமிழ் மன்னர். க : வணிகம்... கா : அகில் சந்தனம் மிளகு

. ஆணிமுத்து பவளம் மணி

வெளிநாடுகட் கனுப்பி - கிளியே!

வெகுபுகழ் பெற்றோமடி. க : அப்படியானால் நான் பேறு பெற்றவள்தான்.

கன்னியின் தந்தை : வெறும் பேறு பெற்றவள் அல்ல மகளே! நீ பெரும் பேறு பெற்றவள். அன்பரே! திருமணப் பரிசாக உமது கையாலேயே அச்செல் வத்தை வழங்கி மணமக்களை வாழ்த்துங்கள்.

மற்றவர் : ஆம், செல்வத்தை வழங்கி நம் செல்வங்களை

வாழ்த்த வேண்டியதுதான்.

இருவரும் : தமிழும் அதன் இனிமையும்போல வாழுங் கள்! தமிழை வாழ்த்தி வாழுங்கள்! தமிழ் வாழுங் காலம் வரை வாழுங்கள்!