பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வம்

35


தி : முயற்சிப்போம் அண்ணா, முயற்சிப்பொம். (குப்பன் வருகிறான்) இதோ இவரைக் கேட்போமே. ஐயா, நிறைந்த செல்வமுடையவர்கள் எவரேனும் பக்கத்துச் சிற்றுார்களில் உண்டோ? குப்பன் : நிறைந்த செல்வமுடையவர்களா? இருவரும் ஆம் கு : இங்கிருந்து மூன்று கல் தூரத்தில் முத்துப்பட்டு

என்று ஒர் ஊர் இருக்கிறது. அவ்வூர் சமீந்தார். காளிப்ப ரகுநாத நாயக்கர் ஒருவர்தான் இப்பக்கத் தில் நிறைந்த செல்வமுடையவர். வாருங்கள் என்னோடு; நானும் அங்கேதான் போகிறேன், நான் அவருடைய வேலைக்காரன் குப்பன்.

த : மிக்க நன்றி ஐயா.

(போகின்றனர்)

காட்சி : 3

சமீன் அரண்மனை

(சமீந்தார் அளவுக்கு மீறி உண்டு, பெரு ஏப்பம் விட்டுத் திணறிக் கொண்டிருக்கிறார். பணியாள் ஒருவன் அவர் பக்கத்திலேயே இருந்து பணிவிடை செய்து கொண்டிக் கிறான்.) சமீந்தார் : டே குப்பா (குப்பன் ஒடி வருகிறான்)

வைத்தியர் வந்தாரா? குப்பன் : அரை நாழியிலே வர்ரதாச் சொன்னாருங்க

எஜமான். ச : ஏழவு. எதைத் தின்னாலும் செரிமானம் ஆக மாட்டேங்குதே ஏண்டா, ஜீரணக்கருவிகள் சரியா வேலை செய்யலையோ? உம், பசியே எடுக்கமாட்