பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 7 மற்றொரு பணக்காரர் வீடு (பணக்காரர் வயிறு புடைக்கப் புலால் உண்டு விட்டு, பல் இடுக்குகளில் சிக்கியிருந்த இறைச்சியை ஈர்க்குச்சியினால் குத்திக் கொண்டு வருகிறார். திருக்குறள் அவர் கையிலிருக்கிறது. அவரும் அவர் நண்பர் ஒ ரு வ ரு ம் உரையாடிக் கொண்டிருக் கிறார்கள் ) பணக்காரர் கொல்லான் புலாலை மறுத்தானைக்

எல்லா உயிரும் தொழும் (கைகூப்பி நண்பர் : (சிரித்து) ஆமாம்...நீங்க இதை அவசியம்

படிக்க வேண்டியதுதான் Ամ ஏனய்யா... - ந : ஏன்னா, நீங்க சுத்த சைவம் பாருங்க. ப நீர் இப்படிக் கேப்பீருன்னு தெரிஞ்சுதானே படிச் சேன்! இப்போ உம்ம அபிப்ராயம் என்ன? திருவள்ளுவர் மாமிசம் சாப்பிடப்படாதுன்னு, சொல்றாரே, நீர் இப்பத்தானே சாப்பிட்டு வந்திருக்கீர் என்று சொல்றிரு, இல்லையா? அதுதான் புரியாத்தனம் என்கிறது. வள்ளுவர் என்னைப்போல ஆளுக்காகவா இந்தக் குறளைச் சொல்லியிருக்காரு? - ந : பின்னே யாருக்கு? எல்லாருக்கும் பொதுவாகத்

தான் சொல்லியிருக்கு. ப : அதான் இல்லை. இதைத் தெரிஞ்சுக்கா மெத்தான் ஒவ்வொருத்தனும் பேசறான். வள்ளுவர் குறளைப் படிக்கும்போது, எந்தக் குறளை, எந்தப் பால்லே, எந்த இயல்லே, எந்த அதிகாரத்திலே, எதுக்காக எழுதப்பட்டிருக்குன்னு பார்த்து, அதற்குத் தகுந்த மாதிரி அர்த்தம் பண்ணிக்கணும். தெரியுதோ?