பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

தமிழ்ச் செல்வம்


தொந்தரவா? ஆடாடா! செல்விருந்தோம்பி வரு விருந்து பார்த்திருப்பதல்லவர் என்னுடைய கடமை! நல்லாரைக் காண்பதுவும் நன்றே என்று நம் பாட்டி பாடியிருக்கிறாளே!

ஆஹா! எவ்வளவு உயர்ந்த பண்பு!

தங்களைப் போன்ற அறிவாளிகள் நேரம், காலம் பார்த்தா வரவேண்டும்? எப்பொழுதும் எனது அரண்மனை திறந்தே கிடக்கும். அடையா நெடுங் கதவுடையோன்' என்று இப்பக்கம் என்னைச் சொல்வது வழக்கம். என்ன காரியமாக வந்தீர்கள்? தங்களிடம் நிறைந்த பொருட் செல்வமும், சிறந்த நூல் நிலையமும், உயர்ந்த கல்வியும், முதிர்ந்த கேள்வியும் ஆகிய அனைத்தும் இருப்பதாகக் கேள்விப் பட்டோம். பார்த்துவிட்டுப் போகலா மென்று வந்தோம்.

அப்படியா நிரம்ப நல்லது. ஏதோ என்னால் இயன்ற பணியைச் செய்து கொண்டிருக்கிறேன்.

கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

என்ற வள்ளுவரின் வழிப்படி நடப்பதே எனது குறிக்கோள். அருகில் நம்முடைய விருந்து மாளிகை இருக்கிறது. அங்கே தங்கி இரவைக் கழித்து, விடியற்காலையில் வாருங்கள். சாவகாச மாகப் பேசலாம்.

மகிழ்ச்சி. வருகிறோம் (போகின்றனர்).

(போவதற்கு முன்னரே மிராசுதார் இருந்த தடுமாறிய நிலையையும் முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சி களையும் திண்ணன் அறிந்து கொள்கிறான்.)