பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வம்

49


தாய் :

தந் :

ஒழுக்கம்தான் செல்வம் என்பதைக் கண்டுபிடிக்க வைத்த அண்ணன்தான் செல்வம். இளையவன் ஏதோ உளறுகிறான் என்று என்னை வெறுத்து விடாமல், உண்மைக்கு உயர்வளித்த அந்த உள்ள மிருக்கிறதே, அந்த உள்ளம்தான் நிறைந்த செல்வத் தின் ஊற்று. ஆகவே, அண்ணன்தான் உண்மைச் செல்வம்.

என் கண்மணிகளே! நீங்களிருவருமே செல்வங் கள். அறிவு நிறைந்த உங்களைவிட எங்களுக்கு வேறு. செல்வம் ஏது?

(மக்களைத் தழுவுகிறாள்.) ஆம். ஆம் பெறுமவற்றுள்யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. என்பது பொய்யாமொழி அல்லவா? அறிவும் ஒழுக்கமும் உள்ள பிள்ளைகளைவிட இவ்வுலகில் நிறைந்த செல்வம் வேறு எதுவாக இருக்கமுடியும்?

காட்சி முடிவு