பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

தமிழ்ச் செல்வம்


யனைய உன் கைகளால் தாளைத் திறக்க மாட்டாயா பொற்கொடியே பூந்திருவே!

த என்னடி, இரக்கமில்லா அரக்கிபோல் நிற்கிறாயே தோ : என்னம்மா? த : எவ்வளவோ தொலைவிலிருந்து, எத்தனையோ நாட்களுக்குப் பின், அலுத்துக் களைத்துப்போய் வந்திருக்கிறார். மரம்போல் நிற்கிறாயே! திறடி கதவை!

தோ : இதென்னம்மா, என்மேல் பழியா? நீங்கள்தானே. த : நான்தான் ஏதோ பிணங்கி நிற்கிறேனென்றால் உனக்கென்னடி போடி, போடி. கால் கடுக்க நிற்கிறார். கதவைத் திற. (தோழி கதவைத் திறக் கிறாள்.) தோ : (தொலைவில்) நான் போகிறேனம்மா

(போகிறாள்) தலைவன் : என்ன கண்ணே! என்மீது கோபாமா? பேச மாட்டாயா? பேசா மடந்தையா நீ? சரி. அப்படி யானால் நான் மட்டும் ஏன் பேச வேண்டும்? (தனக்குள் சரி, ஒரு பொய்த் தும்மல் போட்டுப் பார்ப்போம். அப்பொழுதாவது, வழக்கம்போல், ஆயுசு நூறு' என்று தலையிலே தட்டுவாளல்லவா?

& தும்முகிறேன்.) த நூறு' (தேம்பி அழுகிறாள்.)

தலைவன் : கண்ணே! ஏன் அழுகிறாய்?

த : இல்லை; உங்களை எந்தப் பெண் நினைக்கிறாள்?

இப்போது யார் நினைத்துத் தும்மிaர்கள்?

தலைவன் ; வேறு யார் என்னைப் பற்றி நினைக்க முடியும்? இல்லை, நான்தான் யாரைப்பற்றி நினைக்க முடியும்? எல்லாம் உன்னைப் பற்றித் தான்.