பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழ்ச் செல்வம்


பு : அடி பைத்தியக்காரி தமிழ்ப் புலவனை ஆதரிக்கும் வள்ளல் ஒருவன் இருக்கிறான்' என்று கேட்ட வுடனேயே, என் பசி போய் விட்டதடி. இனி, பசி யேது? களைப்பேது? கவலையில்லாமல் இரு. சென்று வருகிறேன்.

காட்சி : 2

அரண்மனை வாயில் பு : ஐயா, மன்னரைப் பார்க்கவேண்டும், மு-கா: எந்த மன்னரை? பு : எத்தனை மன்னர்கள் உண்டு இங்கே? வரையாது வழங்கும் வள்ளல் குமணச் சக்கரவர்த்தியைத்தான்.

இ-கா : ஐயா, நீர் ஒரு தமிழ்ப் புலவரோ?

பு ஆம். இ-கா : உங்களால் தானையா, மன்னருக்கு இந்தக் கதி

நேர்ந்தது.

பு : ஏன்? என்ன நேர்ந்தது? மன்னருக்கென்ன?

மு-கா : மன்னர் இங்கில்லை ஐயா. காட்டிற்குப் போய்

விட்டார். -

பு : ஏன், துறவியாய் விட்டாரோ?

இ-கா : அவர் செய்த தவற்றுக்கு ஏற்ற தண்டனை

பு : என்ன தவறு செய்தார் மன்னர்?

இ-கா: உம்மைப் போல் வந்து கேட்கும் புலவர்கட் கெல்லாம், செல்வத்தை வாரி வாரி இறைத்தார். நல்லிசைத் தமிழ்ப்புலவர் என்றால், அள்ளி அள்ளிக் கொடுப்பார். கோடி கோடியாய்க் கொட்டினார் இன்னும் சில நாட்கள் அவர் இங்கிருந்தால், அரண் மனைக் களஞ்சியமே காவியாய்ப் போயிருக்கும்.