பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடை

69


டாக்க மாட்டேன். வறுமையென்று வந்தவர்க்கெல் லாம் வாழ்வளித்த தங்கள் வாழ்வு ப்றிபோயிருக் கும் இந்நிலையில்... - - கு : என் வாழ்வு பறிபோகவில்லை. வாழ்கிறேன்"

ஆனால் பயனற்ற வர்ழ்வு. இருந்தாலும், புலவரே! தாங்கள் என்னை நாடி வந்த காரணமென்ன? சொல்லுங்கள்! த ங் க ள் நில்ையென்ன? உண்மையைச் சொல்லுங்கள். பு : என்ன சொல்வேன்? எப்படிச் சொல்வேன்?

ஆடெரி படர்ந்த கோடுயர் அடுப்பில் ஆம்பி பூப்பத் தேம்புபசி புழில இல்லி தார்க்த் பொல்லா வறுமுலை சுவைத்தொறும் பால்காணாமல் z குழவி தாய்முகம் நோக்க, தாய் என்முகம் நோக்க யான் கின்முகம் நோக்கி வந்தனன் குமணா கு ஆஹா புலவரே, என்ன சுவை என்ன சுவை! வறுமையில் வாடிமெலியும் உமது நிலையை, இவ்வளவு சுவையோடு சொல்லும் உமது கவிதைத் திறன் எத்துணை பெரிது! ஐயோ! நான் மன்னனாய் வாழ்ந்த காலத்தில் நீர் வரவில்லையே? கன்னலைக் கவிதையாக்கித் தரும் உம்மைப் பொன்னாற் போற்றியிருப்பேனே! ைவ மணிகளைக் கொட்டி உம்மை வாழவைத்திருப் பேனே! வாழ்விழந்த இந்நாள் வந்து, உமது வறுமையையும் போக்கிக் கொள்ளாமல், என் உள்ளத்தையும் வருத்திவிட்டுச் செல்கிறீரே! ஐயோ! உமது தமிழ்ப்புலமைக்கு யான் என்ன பரிசு 'தரமுடியும்? இனிய தமிழால் உமது நிலையை எடுத்துக் கூறியும் செயலற்று நிற்கிறேனே! என் செய்வேன்! எளியவர்க்கீயாத நிலையில், என் உயிர் இன்னும் இருக்கிறதே! பூமிக்குப் பாரமாய், இந்தப் பொய்யுடலைச் சுமந்துநிற்கிறேனே! (சிறிது