பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீ ர ம்

காட்சி : 1 தெரு (சேரரின் போர்ப்பறை முழங்குகிறது.)

பறை அறிவிப்போன்: வளமுயர் சோழ நாட்டு மக்களேர் கேளுங்கள்: இன்றைக்கு ஏழாம் நாள் எங்கள் சேர படை இந் நாட்டின் மீது போர் தொடுக்கட் போகின்றது. ஆதலால் பசுக்கள் பெண்கள், குழந்தைகள், துறவிகள், பிணியாளர் ஆகியோர் அனைவரும் போர்க்களத்தை விட்டு ஒரு காதது.ாரம் போய் விட வேண்டும், இது எங்கள் சேர மன்னனின் ஆணை கலந்த வேண்டுகோள்.

(மீண்டும் பறை முழக்கம்.)

ஒ-வது வீரன் : அடடா! என்ன கருணையப்பா சேர மன்னனுக்கு; போர் தொடுக்கப் போகிறானாம். குறிப்பிட்ட சிலர் வெளியேறிவிட வேண்டுமாம்!

(நகைக்கிறான்.) இ-வது வீரன் : சிரிக்காதேயப்பா, பலவீனர்களைக் கொல்லக் கூடாதென்பதற்காகத்தான் முன்னறி விப்புச் செய்கிறான்.

மூ-வது வீரன் : மற்றவர்களை மட்டும் கொல்லலாமா?

இ-வீ நமக்கு ஏன் இந்த வம்பு இப்படிச் செய்வது

அரசநீதி.

மு-வீ : நீதியுள்ள அரசன், போர் தொடுக்காமலே இருக்

கலாமே? -