பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழிவு

89


சரி. சரி! உன் குடும்பக் கதையைக் கொஞ்சம் நிறுத்து. இனிமேல் பத்திரிகை படிக்கும் வேலை யும் எனக்கு வேண்டாம். முக்கியமான விஷயங் களையெல்லாம் நீரே படிச்சுச் சொல்லும். உணவு ஜீரணமாகி வயிறு பசியெடுக்க ஏதேனும் 'மருந்து கிருந்து,' அல்வா கில்வா, லேகியம் கீகியம் இந்த விளம்பரம் வந்தால், மறக்காமல்

பார்த்துச் சொல்லும்.

சரிதாங்க. - |செல்வர் உள்ளே செல்கிறார்.1 (தனியே) நானும் பத்திரிகை படிக்கிறேன். ஐயாவும் படிக்கிறாரு நான் பசிபோக ஏதாவது வ ழி யி ரு க் க ா ன் னு படிக்கிறேன்; ஐயா, பசியெடுக்க ஏதாவது மருந்து இருக்கான்னு பார்க்கச் சொல்றாரு நல்ல உலகமையா இது! (தலையிலடித்துக் கொள்கிறான்.1 (மீண்டும் வெளியே வந்து) கணக்கப்பிள்ளை, இன்னொரு சங்கதி - இந்த மாதிரி உடை உடுத்திக்கிட்டு என்னிடம் வேலை பார்க்கக் கூடாது தெயுரிமா? ன்ன் அந்தஸ்தைக் காப்பாத்த மாட்டேங்கிறீரே? - என்னங்க? நான் வாங்குகிற சம்பளத்திலே, தினுசு தினுசா உடையுடுத்த முடியுங்களா? ஏதோ கிடைச்சதை உடுத்திக்கிட்டு வரவேண் டியது தானுங்களே! - இனிமேல் கிடைச் சதை உடுத்திக்கிட்டு இங்கே வேலை செய்ய வேண்டாம் நானே உமக்குத் துணிவாங்கித் தருகிறேன். இங்கே வந்த பிறகு அதைக் கட்டிக் கொள்ளும். வீட்டுக்குப் போகும் பேர்து இங்கேயே அதை அவிழ்ந்து வைத்துவிட்டு, உம் பழைய உடையை உடுத்திக்கிட்டுப் போம், தெரியுதா! -