பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

உவமைக்கவிஞர் சுரதா


Picture Gallery – ஓவியக்கூடம்

பேர் பெற்ற பெரியாரால் தீட்டப்பட்ட ஓரழகிய ஓவியம் இருந்தது. ஒரு கோடீஸ்வரன், கலைகளின் அருமை சிறிது மறியாதவன், புகழ் கருதி அதை வாங்கித் தன் ஓவியக் கூடத்தில் (Picture Gallery) வைத்தான். அக்கூடமானது ஒரு கலைஞன் ஆட்சிக்குட்பட்டிருந்ததால், அக்கலைஞன் அவ்வோவியத்தைக் காணுந்தோறும், மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் உற்றான்.

நூல் : கட்டுரை மலர் மாலை 1933
கட்டுரை : செல்வமும் வறுமையும், பக்கம் - 102
கட்டுரையாசிரியர் : சாமி, வேலாயுதம் பிள்ளை, பி.ஏ., எல்.டி.,
(தலைமை ஆசிரியர், போர்டு கலாசாலை,
அய்யம்பேட்டை, தஞ்சம் ஜில்லா)
பன்னசாலை - இலை வீடு

காவிரியாற்றின் கரையில் (பன்னசாலை) இலை வீட்டில் சுபத்திரையான, தன் மனையாளோடு பரதன் வாழுநாளில் ஒருநாள் அப்பரதன், அரிய தவஞ் செய்தாலன்றி அருமகவைப் பெறலாகுமா? ஆதலால் இங்கிருந்து யான் என்செய்வேனென்று தன் மனையாளோடு கூறினன்.

நூல் : திருத்துருத்திப் புராணம் (1933)
திருவாலங்காட்டுப் படலம், பக்கம் - 17
உரைநடை, குறிப்புரை : ப. சிங்கார வேற்பிள்ளை
(குற்றாலம், போர்டு உயர்தரக்
கலாசாலைத் தலைமைத் தமிழ்ப்பண்டிதர்)
Museum - பொருட்காட்சிச் சாலை
Scientist - அறிபொருள் வல்லுநர்

நான் ஒரு பெரிய பொருட்காட்சிச் சாலைக்குச் சென்றேன். ஓர் அறிவில்லாப் பணக்காரன், அதன் உயர்வை உணராதவன். அதைத் தனதென்று பெயரிட்டுக் கொண்டிருந்தான். ஆனால், அதன் மேற்பார்வையாளராகிய ஒர் அறி பொருள் வல்லுநர் (Scientist) அதிலுள்ள பொருள்களுள் ஒவ்வொன்றின் அருமையையும் உணர்ந்து, அவற்றின் மெய்ப்பொருள் காண்பதில் கண்ணுங் கருத்துமாய், அவைகளைத் தேடி ஆராய்ந்து அடுக்கி வைப்பதில் தம் வாழ்நாளெல்லாவற்றையும் செலவழித்தவராய் இருந்தார்.

நூல் : கட்டுரை மலர் மாலை, பக்கங்கள் - 101, 102 - 1933