பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

உவமைக்கவிஞர் சுரதா


ஆசுகவி, மதுரகவி,
சித்திரகவி, வித்தாரகவி
ஆசுகவி - கடும்பாச் செய்யுள்
மதுரகவி - இன்பாச் செய்யுள்
சித்திரகவி - அரும்பாச் செய்யுள்
வித்தாரகவி - பெரும்பாச் செய்யுள்
லாவணியம் - கட்டழகு
நூல் : பக்கம் : 116


முன்சப்தம் - எதிரொலி

நெடுந்தூரம் உயர்ந்த மலையில் பெரிய மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள சோலையில், தங்களிடம் பொருந்திய தெய்வத் தன்மையால் காண்பார்க்கு அச்சத்தையுண்டு பண்ணும் தெய்வப் பெண்கள் பலர் ஒன்று கூடி, சிறப்புற்று விளங்குகின்ற மலையிடமெல்லாம் எதிரொலி (முன் சப்தம்) உண்டாகும்படியாகப் பாடி ஆடுவர்.

மேற்படி நூல் : பக்கம் : 11
இலக்குமி - திருமகள்
இரத்தினங்கள் - மணிகள்
சடாக்ஷரம் - ஆறெழுத்து
திலகம் - பொட்டு
முத்திரை - அடையாளம்
நூல் :