பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

177


மயிலை சண்முக சுந்தரன் - மயிலை முத்தெழிலன்

குழந்தைகளுக்காகவே வாழ்ந்த மயிலை சிவமுத்து அவர்கள் அன்புச் செல்வனே கவிஞர் மயிலை முத்தெழிலன் அவர்கள். சண்முக சுந்தரம் என்ற பெயரை மயிலை முத்தெழிலன் என்று 1954ஆம் ஆண்டில் இவர் மாற்றி வைத்துக்கொண்டார்.

ஜெயராமன் - வெற்றி வில்லாளன் (1955)
கவிஞர் வெற்றி வில்லாளன்,
தாத்தையங்கார் பேட்டை, திருச்சி மாவட்டம்.
Dearness Allowance – அருமைப்பாட்டுப் படி

போர்க் காலத்தில் தோன்றிய புதுச் சொற்களில் ’பறக்குங்குண்டு’ என்பது ஒன்று. இதனையே ஆளில்லா விமானம் என்பாரும் உண்டு. ’பஞ்சப்படி’ என்பது பெருவழக்காக வழங்குகிறது. (Deamess Allowance) என்பதை எப்படியோ இப்படி மொழி பெயர்த்துவிட்டனர். ஆயினும் அதனை இனி அருமைப்பாட்டுப் படி என மாற்றப் போவதில்லை.

நூல் : தமிழோசை (1955), பக்கம் , 89
நூலாசிரியர் : செந்தமிழ்க் காவலர்
டாக்டர் அ. சிதம்பரநாதன், எம்.ஏ., பிஎச்.டி., (தமிழ்த்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்)
Light Signal – ஒளி அஞ்சல்

தந்தி என்பது ஒலிமுறையில் உள்ள பேச்சு மொழியல்ல. மொழியிலுள்ள எழுத்துக்களுக்குத் தனி ஒலிக்குறிப்பு வைத்து அவ்வொலிக் குறிப்புகளினால் மொழியை அனுப்பவும் வாங்கவும் உள்ள சாதனமே தந்தி. இதே முறை ஒளி அஞ்சலிலும் (Light Signal) பயன்படுத்தப்படுகிறது.

நூல் : தமிழில் தந்தி (1955), பக்கம் : 21
நூலாசிரியர் : அ. சிவலிங்கம்