பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

உவமைக்கவிஞர் சுரதா


புத்தி மயக்கம் சிந்தை மருள்
மோக்ஷ வீடு மேலகம்
ஆராதனை வழிபாடு
தேவாங்கம் பட்டுச் சீலை
சன்மார்க்கம் நல்லாறு
உன்னதம் மேன்மை
சிரக் கம்பம் தலை நடுக்கம்
நூல் : விஸ்வகர் மோபதேச வீரகண்டாமணி,
பி. கல்யாண சுந்தராசாரி (நூலைப் பதிப்பித்தவர்)
Deg நீண்ட சமையல் பாத்திரம்
Cheeks கதுப்புகள்
சாமுத்திரிக நூல் வடிவமை நூல்
ராஷ்டிரம் நாடு
Degree மாத்திரை
Beauty Spot அழகின் உறைவிடம்
Radio ஒலிபரப்பி
Department of Epigraphy கல்வெட்டு பதிவு நிலையத்தார்
Exeutive Officer ஆணையாளர்


சல்லரி, கஞ்சிரா

சல்லரி என்றழைக்கப்பட்டு வந்த பழைய கைப்பறையே இன்று கஞ்சிரா என்று அழைக்கப்படுகிறது. இதை வாசித்தால் கிலுகிலுவென்னும் ஒருவித ஒலி உண்டாகும். தலைஞாயிறு இராதா கிருஷ்ணையர், புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்திப் பிள்ளை ஆகியோர் கஞ்சிரா வாசிப்பதில் மிகச் சிறந்தவர்கள்.