பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

195


இசைத்தமிழன்

அறுபத்து மூன்று நாயன்மார்களுக்குள்ளே ஆனாய நாயனார் என்பவர் வேய்ங்குழலைக் கொண்டு வாசிதத போது சராசரங்கள் யாவும் இயக்கமற்று அவ்வினிய ஓசையென்னும் தேனையுண்டு தியங்கிய பிரமரங்கள் போல் சலனமற்று நின்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. சங்கீதத்துக் குருகாத கன்னெஞ்சமுடையான் மானிட இயல்புடையவ னல்ல னென்றும் சகல துர்க்குணங்களுக்கும் அவன் மனம் இலேசாய் இணங்குமென்று இங்கிலாண்டு தேசத்தன் காளிதாசரென்று பெயர்பெற்ற ஷேக்ஸ்பியர் என்னும் நாடகக்கவி கூறுகின்றனரென்றால் சங்கீதத்தின் பெருமையை இன்னும் என்னென்று வியப்பது.

இதழ் : ஜனவிநோதினி (1910)
கட்டுரையாளர் : இசைத்தமிழ்
BALCONY - உயர்நிலைப்படி

கொட்டகையை யடைந்ததும் டிக்கெட்டு விவரங்களை விசாரித்தான். இரண்டு டாலர் - அல்லது சுமார் ஏழு ரூபா - கொடுத்தால் எல்லாவற்றிலும் உயர்ந்ததான பாக்ஸ் (Box) அல்லது பெட்டி என்ற ஆஸனம் கிடைக்குமென்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். பணப்பையைத் திறந்து பார்த்தான். அதில் ஐந்து டாலர்களிருந்தன. அவன் மனம் ஷோக்கில் நிலைத்திருந்தபடியால் பெட்டி டிக்கட்டையே வாங்கிக்கொண்டு உள்ளே சென்று உயர்நிலைப் (Balcony) படியேறி, ஒரு பாக்ஸில் போய் உட்கார்ந்தான்.

நூல் : நாகரீகப் போர் (1925), அதிகாரம் 4 - மாயா மித்திரம், பக்கம் - 38,
நூலாசிரியர் : பாஸ்கர என். நாராயணய்யா, பி.ஏ., பி.எல்., எல்.டி.,
இரணியப் பிண்டம் - பொற்கட்டி

இந்தியாவில் ரிக்வேத காலத்திலேயே (சுமார் கி.மு. 2000) பொற்கட்டி, பணமாக உபயோகிக்கப்பட்டதாக அறிகிறோம். அது இரணியப் பிண்டம் என்றழைக்கப்பட்டது. தமிழில் அதன் நேர் பொருள் பொற்கட்டி. கந்தபுராண