பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

உவமைக்கவிஞர் சுரதா



Hero - பெருமான்
Heroine - பெருமாட்டியார்

இந்துக்கள் அதிர்ஷ்டவசமென்றும், திசாபலம் ராசி நட்சத்திரங்களின் பலமென்றும், ஊழ்வினைப் பலமென்றும் பலவகையில் இந்நடவடிக்கைகட்கு நியாயம் சொல்வதால், கவி எடுத்துக்கொண்ட பெருமான், பெருமாட்டியார் (Hero, Heroine) பெருமை இவ்வித இவ்வித சம்பவங்களால் அலங்கரிக்கப்பட்டு விசித்திரமாவது பற்றி, இதை ஒரு அணியென வகுத்தல் தமிழாசிரியர் பெற்றியாம்.

மேற்படி நூல் : பக்கம் : 414

சூரிய நாராயண சாஸ்திரியர் -பரிதிமாற்கலைஞன்

இதுகாறும் புலவர் குழாம் பயின்றுவரும் இடைநிலை யிலக்கியங்களொடு மறுதலைப்பட்ட இலக்கணங்களை யுடையதென இந்நூல் சிற்சிலவிடங்களிற் புலப்படினும் நூற்கருத்துணரு முன்னர் இதனையன்னதென்கறி சுழற்க. நூலினை முற்றுமுணர்ந்த பின்னரும் இந்நூல் புரையுடைத்து இந்நூல் தக்கின்று என வாளாது கூறலிற் பெரும் பயனின்றாம். இவ் விக் காரணங்களான் இஃது அப்பெற்றித்தெனச் சிறியேனைத் தெருட்டா வழி.

இனி யிந்நூலினை வெளிப்படுத்தும் வழி எனாதுண்மைப் பெயரை மறைத்துப் பரிதிமாற்கலைஞன் எனப் புனைவுப் பெயர் நிறுத்தி வெளிப்படுத்துகின்றேன்.

நூல் : தனிப்பாசுரத் தொகை பக்கம் : 8. (5-12-1899)
நூலாசிரியர் : பரிதிமாற் கலைஞன் (வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார், பி.ஏ.)
Aquvarium - நீர்நிலைக் கண்ணாடிக் கூடு

நீர்நிலைக் கண்ணாடிக் கூடு (Aquarium) - நீரில் வாழும் சிறு பூண்டுகளும் செந்துக்களும் வாழும்படி கண்ணாடியினால் செய்யப்பட்டு நீர் பெய்யப்பட்டுள்ள கூடு.

நூல் : (வித்தியா தீபிகை என்னும்) கல்வி விளக்கம் (1899) பக்கம் - 73.
மொழி பெயர்ப்பாளர்கள் : எஸ். வி. கள்ளப்பிரான் பிள்ளை. சி, அப்பாவு பிள்ளை. வி. பி. சுப்பிரமணிய முதலியார்.