பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

உவமைக்கவிஞர் சுரதா


அவிழ்தம் மருந்து
இலக்குமி தாக்கணங்கு
இலக்கு குறிப்பு
சுபாவம் இயற்கை
கோமளம் இளமை
சுதந்தரம் உரிமை
திலகர் மேம்பட்டவர்
வருணாச்சிரமம் சாதியொழுக்கம்
நூல் : மார்க்கண்டேய புராணம் வசன காவியமும் அரும்பத விளக்கமும் (1909) (இரண்டாம் பதிப்பு)
நூலாசிரியர் : உபய கலாநிதிப் பெரும்புலவர் - தொழுவூர் வேலாயுத முதலியார்.

விசித்திரம் - பேரழகு
நூல் : அமிச சந்தேசம் (சித்திரபானு, பங்குனி)
நூலாசிரியர் : கவித்தலம் துரைசாமி மூப்பனார்.

ப்ரசண்ட் மாருதம் : பெருங்காற்று (1909)
இதழ் : செந்தமிழ், செளமிய ௵ மார்கழி, தொகுதி : 8 பகுதி : 2. பக்கம் - 71
கட்டுரையாளர் : வீராசாமி ஐயங்கார்

சந்திபாதம் முதலிற்பிடித்துப் பஞ்சாப் போடுதல்
அவதூதம் புறங்கையாற் கீழே தள்ளுதல்
பரக்கேயணம் இழுத்துத் தளளுதல்
முட்டி கைகுவித்து இடித்தல்
கீலநிபாதம் முழங்கை, கணைக்கைகளினால் இடித்தல்
வச்சிரநிபாதம் கைவிளிம்புகளால் இடித்தல்
பாதோத்தூதம் நடுவிரல் ஆழிவிரல் என்பவற்றினடுவே

பெருவிரல் வைத்துக் குத்தல், காலாற் றுக்கியெறிதல்

பிரமிருட்டம் உடம்பெல்லாம் இறுகப் பிடித்துத் தள்ளியுழுக்குதல்