பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

43


மற்போராவது : ஆயுதமின்றித் தத்தம் உடம்பினாற் செய்யும் போர்,
அது சந்நிபாதம், அவதூதம், பிரக்கேபணம், முட்டி, கீலபாதம், வச்சிரதிபாதம், பாதோத்துாதம், பிரமிருட்டம் என எண் வகைப்படும். இவை முறையே முதலிற் பிடித்துப் பஞ்சாப் போடுதல்.
DEG - நீண்ட சதை

மன்னன் வருகிறான் என்பது கேட்டுணர்ந்த ராஜகுமாரத்தி தனக்கு நேரக்கூடிய அகெளரவம் ஒன்றையே பெரிதெனக்கருதித் தன் ஆசை மணாளனை, ஆங்கிருந்த (DEG) என்ற நீண்ட சமையல் பாத்ரத்தில் புகுந்து மறைததாள. -

இதழ் : செந்தமிழ் (1910) தொகுதி - 8. பகுதி - 10 சாதாரண ௵ ஆவணி ௴
கட்டுரை : லெபன்னிஸா
கட்டுரையாசிரியர் : வீ. சுப்பிரமணிய ஐயர் (தமிழ்ப் பண்டிதர்)
Cheeks – கதுப்புகள்

குசாக்ர புத்தியுள்ள மேனாட்டு வித்வானொருவர் இம் முத்தமிடும் வாடிக்கை பூர்வத்தில், மனிதர்கள் மாம்ஸ பக்ஷணிகளாய் (Cannibals) இருந்த காலத்தில், புருஷன்தான் ஸ்த்ரீயொருத்தியினிடம் கொண்ட விசேஷப் பிரியத்தை அவளுக்குச் செவ்வனே தெரிவிப்பதற்காக தன்னுடைய பற்களினால் அவள் உதடுகளிலும் கதுப்புகளிலும் (Cheeks) கடித்து, அவளை ரஸ்முள்ள மாம்பழம் போல விழுங்க வேண்டுமென்ற தன்னுடைய அவாவைக் காட்டும் அவ்வாடிக்கையிலிருந்து மாறி நாகரீகத்தினால் உண்டான அனுஷ்டானமே இம் முத்தமிடுதல் எனக் கூறுகின்றார்.

இதழ் : செந்தமிழ் (1910) தொகுதி - 8, பகுதி 10, பக்கம் 508
கட்டுரை : முத்தமிடலின் வரலாறு
கட்டுரையாசிரியர் : வீ. சுப்பிரமணிய ஐயர் (தமிழ்ப் பண்டிதர்)
அங்குஷ்டம் பெருவிரல்
தர்ஜனி சுண்டுவிரல்
மத்தியமம் நடுவிரல்
அனாமிகை ஆழிவிரல்
கனிஷ்டம் கடை விரல்