பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

உவமைக்கவிஞர் சுரதா


நூல் : மொழிநூல் (1913) பாயிரவியல், பக்கம் 38
நூலாசிரியர் : மாகறல் கார்த்திகேய முதலியார்
Museum - பல பொருள் காட்சி சாலை

மியூஸியம் : பல பொருள் காட்சி சாலை, இது எழும்பூரிலிருக்கும் ஓர் நேர்த்தியான கட்டடம். நானாவிதமான நூதன வஸ்துக்களையும் வினோதப் பொருள்களையும் கொண்டு வந்து சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நாடக சாலையும், பெரியதொரு புஸ்தக சாலையும் இருக்கின்றன.

நூல் : விஷ்ணு ஸ்தல மஞ்சரி (1908-1913)

இரண்டாம் பாகம் பக்கங்கள் 89-93

நூலாசிரியர் : மயிலை கொ. பட்டாபிராம முதலியார்
Cycle - மிதிவண்டி

நிமிஷத்தில் நூறு மையிலோடும் நேர்த்தியுள்ள ரயில்வண்டி, முந்நூறு கப்பல், நாலஞ்சுகப்பல் தப்பமுடன் மிதிவண்டி ஒவ்வொரு கப்பல், தப்புகள் வராமலே உயர்வான மோட்டார் கார்வண்டி,...

நூல் : சந்தியா வந்தனம் (1913), பக்கம் - 35
நூலாசிரியர் : கோ. வெங்கிடாசல ஆச்சாரியார், திருச்சிராப்பள்ளி
மகாநாடு (மாவட்ட) மாநாடு

1 அமெரிக்க மதுரை மிசினில் உள்ள கிறித்துவ ஆலயங்களின் மாவட்ட மாநாட்டின் மூன்றாவது ஆண்டு அறிக்கை : முதற்பதிப்பு; II சாமுவேல் ஜோசப் அய்யர், அருப்புக்கோட்டை, லெனாக்ஸ் பிரஸ், பசுமலை, ஜூலை, 1913

நூல் : அமெரிக்க மதுரை மிசினில் உள்ள கிறித்துவ அலயங்களின் மாவட்ட மாநாட்டின் மூன்றாவது ஆண்டு அறிக்கை (1913)
நூலாசிரியர் : ஏ.எஸ். அப்பாசாமி பிள்ளை
தமிழ்நூல் விவர அட்டவணை (1911-1915) மூன்றாம் தொகுதி - மூன்றாம் பகுதி பக்கம் - 34 பொதுப் பதிப்பாசிரியர் கொண்டல் மகாதேவன், பி.எஸ்ஸி. எம்.ஏ.,