பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

உவமைக்கவிஞர் சுரதா


விவாஹவேஷம் - மணக்கோலம்

குறமடந்தை - குறச்சிறுமி, (வள்ளி நாயகி) மணக்கோலம் - - விவாஹவேஷம், மணக்கோலமானவன் செங்கீரை யாடியருள் எனவும், தெய்வங்கள் மணவாளன் செங்கீரை யாடியருள் எனவும் முடித்துக் கொள்க.

நூல் : முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் (1914), பக்கம் - 26
நூலாசிரியர் : காஞ்சி. மகாவித்வான் இராமசாமி நாயுடு
விதூஷகன் கோமாளி, கோணங்கி
உரோகணி உருளி
தேசோமயம் பேரொளி
பரிபாகம் ஏற்ற பக்குவம்
அஞ்சுகம் அழகிய கிளி
அபரஞ்சி புடமிட்ட பொன்
கருடன் பறவைக்கரசு
நூல் : சதகத்திரட்டு (1914) சென்னைமதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டது.

சராசரம் = சரம் + அசரம் : அசையும் பொருள் அசையாப் பொருள்

கமனம் நினைவு
கனடம்பம் மிக்க பெருமை
பட்சண வர்க்கம் பலவித சிற்றுண்டி
சரித்திரம் வரலாறு
விவேகிகள் மதியுள்ள பேர்
நூல் : வடிவேலர் சதகம் (1915)
நூலாசிரியர் : உடுமலைப்பேட்டை முத்துசாமிக் கவிராயர் (திரைப்படப் பாடலாசிரியர் உடுமலை நாராயண கவியின் ஆசிரியர் )
Visitor's Book-பார்வையீடு புத்தகம்

ஸ்ரீமான் காந்தியும் அவரது பாஷாபிமானமும் - ஸ்ரீமான் காந்தியவர்கள் சென்னைக்கு விஜயம் செய்தபோது ஸ்ரீராமகிருஷ்ண மாணவர் இல்லத்தைப் பார்க்கப் போயிருந்தனர். அங்குள்ள ஏற்பாடுகள் எல்லாவற்றையும் கண்டு