பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

உவமைக்கவிஞர் சுரதா


நீலாம்பிகையார், அங்ங்னமானால், இனி நாம் தனித்தமிழிலேயே பேசவும் எழுதவும் வேண்டும் என்று உணர்ச்சி ததும்ப உரைத்தனர்.

அன்று முதல் அம்மையார் தனித்தமிழ்ச் சொற்களையே அமைத்துப் பேசவும் எழுதவும் முற்பட்டார். அடிகளும் தம் மகளின் முற்போக்குக்கிணங்க, ‘சுவாமி வேதாசலம்’ எனுந் தம் பெயரை மறைமலை அடிகள் எனவும், தம் “ஞானசாகரத்தை அறிவுக் கடல் எனவும், மாற்றியமைத்தனர்.

மற்றும் தாம் எழுதிய புதிய நூல்களைத் தனித்தமிழிலேயே எழுதியும், பழைய நூல்களை மறுமுறை பதிப்பிக்கும்போது வட சொற்களைத் தனித்தமிழ்ச் சொற்களாக மாற்றிப் பதித்துந் தனித்தமிழ் தொண்டு புரிந்து வந்தனர்.

நூல் : மறைமலையடிகள் (1951) பக்கங்கள், 77, 78.
நூலாசிரியர் : புலவர் அரசு
காயசித்தி - உள்ளுடம்பு

உள்ளுடம்பு (காயசித்தி) பெறுதலையே பெறற்(கரும்) பேறாகவும், சித்தி முத்தியாகவும், மற்ற யாதனா சரீரங்களை விட்டு இந்த உள்ளுடம்பைப் பற்றுதலொன்றையே கடைப்பிடி'யாகவும் பிடித்துழைக்கிறவர்கள் உலகத்தில் உண்டென்பது விளங்கும்.

நூல் : நாத-கீத-நாமகள் சிலம்பொலி (1916) பக்கம் - 118.
நூலாசிரியர் : சி. வி. சாமிநாதையர்.
நவநீதகிருஷ்ணன் - வெண்ணெய்க்கண்ணன்

இது மகா-ள-ள-ஸ்ரீ பிரசங்க வித்வான் நவநீதகிருஷ்ண பாரதியென்றும் கண்ணபுரத்துக் கவுணிய வெண்ணெய்க் கண்ணனார் இயற்றியது.

நூல் : சத்திய அரிச்சந்திரப் பா (1916 பக்கம் - 4.
நூலாசிரியர் : மதுரை, தல்லாகுளம் சி. முத்திருள முதலியார்.
நூலை பரிசோதித்தவர் : பிரசங்க வித்வான் நவநீத கிருஷ்ண பாரதியார்.
தரித்திரம் - நல்கூர்வார்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்