பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

57


Tamil Cyclopedia - தமிழ்க் களஞ்சியம்

தமிழ்க்களஞ்சியம் (Tamileyelopedia) இப்பெயர் கொண்ட நூலொன்று மாத சஞ்சிகையாக வெளிவருகிறது. பகுதி ஒன்று வெளி வந்தது. இதில் தமிழின் உற்பத்தி, தமிழின் தொன்மை, தமிழின் பதப்பொருள், தமிழ்ச்சிறப்பு (தமிழ் உயர்தனிச் செம்மொழி, தமிழ்த் தெய்வ பாஷை, தமிழ் மூலபாஷை) தமிழ்ச் சங்கம், தலைசங்கம் முதலிய விஷயங்க ளடங்கியிருக்கின்றன. சஞ்சிகையொன்றுக்கு விலை அணா 8. வேண்டியவர்கள் சென்னை பிரம்பூர் தமிழ் சைக்ளோபீடியா ஆபீசுக்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம்.

இதழ் : சித்தாந்தம் (1918 ஜனவரி) தொகுதி 7, பகுதி-1 பக்கம், 16.
சொல்லாக்கம் : பூவை கலியான சுந்தர முதலியார்
Double Pneumonia – அள்ளு மாந்தம்

என் குழந்தைகளில் 4 பிராயமுள்ள குழந்தை ஒன்றுக்கு அள்ளு மாந்தம் (Double Pneumonia) என்னும் கொடிய வியாதியால் வருந்தும் போது அவரது தேவி சித்த பூரணச் சந்தி ரோதயத்தின் பெருமையையும், அது அக்கொடிய வியாதியைக் குணப்படுத்தினதையும் முக்கியமாய்த் தெரிவிக்கப் பிரியப்படுகிறேன். இவரது சித்தவைத்தியத்தின் திறமையை என்னால் சொல்லத் திறமல்ல.

ஜி. ஆர். ஆதிகேசவலு நாயுடு,
Shrodtriathar, Monicipal Commissioner
Weaver's Loom - தறிமரம்

தறிமரம் : தறியின் மரம் (தறி = A weaver's Loom)

நூல் : ரிப்பன் ஐந்தாம் வாசக புத்தகம் (1918) பக்கம் - 56
நூலாசிரியர் : தி. செல்வக் கேசவராய முதலியார். எம்.ஏ., (சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்)