பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

5


உள்ளது. சொற்களைப் பட்டியலாக மட்டும் தந்திருப்பாரேயானால் அவர் பங்கில் சிறப்பிராது. இத்தொகுப்பு நூலை அவர் அமைத்துக்கொண்ட விதம் சிறப்புடையது. சொல், சொல வழங்கப்பட்டுள்ள நூலில்/இதழில் உள்ள பத்தி, நூல்/ இதழ்ப்பெயர் நூலாசிரியர், ஆண்டு என்ற நிரலில் அமைத்துக்கொண்டு, அதற்கப்பால் ஆங்காங்கே சிற்சில இடங்களில் குறிப்பையும் தந்துள்ளமை பாராட்டுக்கு உரியது. தகவல்களைத் தரும்போது, "இச்சொல்லாக்கம் அடிக்குறிப்பில் இடம் பெற்றுள்ளது எனவும் இம்மொழிபெயர்ப்பு அடிக் குறிப்பில் இடம் பெற்றுள்ளது எனவும் ஆங்காங்கே சொல்லிச் செல்வன கவிஞரின் சொற்பொருள் தேடும் வேட்டையை / வேட்கையை நமக்குப் புலப்படுத்துகின்றன.

தமிழாக்கச் சொற்கள் தமிழ் நூல்களில் பெய்யப்பட்டதை நிரலாகத் தந்திருப்பது அறிதற்குச் சுவை பயக்கிறது. தொகை விளம்பி (ப.12), நிறுத்தற்குறி (ப.13), புகைத்தேர் (ப.18), ஆவி வண்டி (ப.34), காற்றெறி விளக்கு (ப.24), கடைவழி (ப27), நீர்நிலைக் கண்ணாடிக் கூடு (ப.30), ஜலதரங்கம் (ப.106) நிலைச் செண்டு (ப.123), ஒளி அஞ்சல் (ப.171), இலவந்திகை (ப.182) முதலிய சொற்களின் ஆக்கம் படித்தறிவதற்கு இனிமை தருவதாகும்.

நூற்பகுதியில் சொல் இடம் பெற்றிருப்பதை அறியும்போது, அச்சொல் பெய்யப்பட்ட சூழ்நிலை, அந்தக் காலத்தில் வழங்கப்பட்ட மொழிநடை ஆகியவற்றை விளங்கிக் கொள்ள முடிகிறது. பாராளுமன்று (1904, உயிரணு (1909), நிழற்படம் (191) வாக்கு (1912) போன்ற சொற்கள் அக்காலத்திலேயே அழகியதாய் மொழி பெயர்த்திருக்கும் திறனை / தேவையை அறிந்துகொள்ள முடிகிறது. சில சொற்களின் பெயர்ப்பு நமக்கு வியப்பூட்டுவதாயும், மருட்கை தருவதாயும் அமைந்திருப்பதை உணர்கிறோம். மதி வல்லோன் (ப112, நெய்யாவி ஊர்தி (ப160), முதலறிவு (ப96, இறப்பு ஏற்பாடு (ப.125 ஆட்டக் கடுதாசிகள் (ப.135), சூடளந்தான் (ப.136), பாழ் (ப.163 முதலியவை இத்தகையன.

பிற துறைச் சொற்கள் அழகியக் கலைச் சொல்லாக்கம் பெற்றிருப்பதையும் காண்கிறோம். மருத்துவம் தொடர்பான கலைச் சொல்லாக்கம் பெற்ற பல சொற்கள் அவ்வாறு அமைந்துள்ளன. உமிழ் நீர்க்கோளம் (ப.39), உடற்கூற்று நூல் (ப126), சிற்றணுக்கூடு (ப.126) முதலியனவற்றை இதற்கு எடுத்தக் காட்டலாம்.