பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

உவமைக்கவிஞர் சுரதா


ருத்திர பூமி - சுடுகாடு

கல்லாதார் முகம் ருத்திரபூமி (சுடுகாடு)யை ஒக்குமெனவும், கல்லாதார் உருவம் மரத்துக் கொப்பெனவும், கல்லாதார் கண்கள் இரண்டும் புண்களை யொக்குமெனவும், கற்றார் சபையில், கல்லாதார் சுவானத்துக் கொப்பாவார் எனவும், கல்லாதார் உடம்பு பாழ்நிலத்தை யொக்குமெனவும் அறிஞர் கூறியிருக்கின்ற தனக்குப் பாழ் கற்றறிவில்லா உடம்பு என்பதனாலு மறிக.

நூல் : தமிழ்க் கல்வி (1924) பக்கம் 96
நூலாசிரியர் : மனத்தட்டை எஸ் துரைசாமி அய்யர்
Liquor Amnii — முன்நீர், பனிநீர்

வாஸ்தவமாகவே கருப்பையானது கர்ப்ப காலத்தில் 20 நிமிஷத்திற்கொருதரம் சிறுத்துக் குறுகிப் பிற்பாடு தளர்ச்சியடையும் பிண்டம் சிதைந்து போகாமலிருப்பதற்காக அதைச் சுற்றிலும் ஒர்வகை நீர் ஏற்பட்டிருக்கிறது. அதை (Liquor Amnii) முன்நீர், பனிநீர் என்பார்கள்.

நூல் : மருத்துவ மாணாக்கியர்களுக்கு உபயோகமான கைப்புத்தகம் (1924) பக்கம் -5
நூலாசிரியர் : கோ. கி. மதுசூதன ராவ் (மதராஸ் கவர்ன்மென்ட் பிரசவ வைத்திய சாலையில் மருத்துவ மாணாக்கியர்களின் உபாத்தியாயர்)
Cells - கண்ணறை

கருத்தரித்த முட்டையானது அதிசீக்கிரமாய் வளர்ந்து அநேக விதங்களான நுண்ணிய கண்ணறைகளாக மாறுகிறது. பிண்டத்தைச் சுற்றிலும் நீருடன் மூடியிருக்கும் இரண்டு ஜவ்வுத் தோல்களுற் பத்தியாகின்றன. வெளித்தோலுக்கு கோரியன் என்றும் உள் தோலுக்கு ஆம்னியன் Amnion என்றும் பெயர்.

மேற்படி நூல் : பக்கம் - 4
Budget - அரசிறை கணக்கு
நூல் : லோகமான்ய பாலகங்காதர திலக் (1924) பக்கம் : 69
நூலாசிரியர் : கிருஷ்ணஸ்வாமி சர்மா