பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

85


என்னும்திருவாளர் தி.செ. சுப்பிரமணிய பிள்ளை) செய்த அரும் பெரும் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கன.

உள்ளூரிலும் வெளியூரிலுமுள்ள பல தனவான்களிடத்திலும் தனித்தனியாகவும் கூட்டங்கூடியும் பேசி, திருநெல்வேலிக்கு பணக்கூடம் (பாங்க்) ஏற்படுத்த வேண்டிய அவசியத்தையும் அதனால் அடையக் கூடிய நற்பயன்களையும் ஒவ்வொருவரும், அறிந்துணரும்படி எடுத்துக் கூறிவந்தார்.

நூல் : வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி. செ. சுப்பிரமணிய பிள்ளை யவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924) பக். 40,41.


Bunglow - நல்லகம் கொலுவிருக்கை
Durbar Hall - மண்டபம்

அரண்மனையின் பழைய கட்டிடங்கள் பண்டைக் காலத்து நாட்டுப்புறப் பாங்கில் அமைக்கப்பட்டிருந்த படியாலும் இக்காலத்துக்கு அது போதாத தாயிருந்தபடியாலும் நமது நண்பர் சில கட்டிடங்கள் அதிகமாய் வேண்டுமென்று கருதினார். ஜமீன்தாரவர்கள் உபயோகத்திற்கு ஒரு நல்லகமுமே (பங்களா), கலியாணமாலும், கொலுவிருக்கை மண்டபமும் (தர்பார் ஹால்), ஜமீன் அரசாட்சிக்குரிய பலதுறைவேலைகளும், தனித்தும் சேர்த்தும் நடைபெறுதற்குப் பொருத்தமான மாளிகையும் ஆகிய முக்கியமான மூன்று கட்டிடங்களையும் மென்மையாகக் கட்டுவித்தார்.

நூல் : வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி. செ. சுப்பிரமணிய பிள்ளை யவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924 ப. 92
நூலாசிரியர் : மு. பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை (திருநெல்வேலி இந்து கலாசாலைத் தமிழாசிரியர்)
உரையாடல் - சம்பாஷணை

இவர் உரையாடலில் (சம்பாஷண) ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிக்கிடக்கும்; நுண்பொருள் நயம்பட விளங்கும் சொன்னயம் சிறந்து துலங்கும். சமயத்துக் கேற்ற விநயமும், விகடமும் இயல்பாகவே வரும். புன்சிரிப்பிற் புலவராகவும், பெருங்சிரிப்பிற் பேராசிரியராகவும் இருந்தாலும், மிக விகடமாகப் பேசும்போதும், தான் முதலிற் சிரிப்பதில்லை. அப்பாற் சிரிப்பதும் அடக்கமாகவே யிருக்கும்.

மேற்படி நூல் : பக்கங்கள் - 27, 28