பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சங்கத் தேர்வுகளில் வெற்றி மேல் வெற்றி அக்காலத்தில் தொடக்கப் பள்ளிகளின் மேற் பார்வையாளராயிருந்த திருவாளர் சாமிநாத முதலியார் அவர்களின் தூண்டுதலால் மதுரைச் சங்கத் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் வேங்கடசாமி நாட்டார் அவர்களுக்குத் தோன்றுவதாயிற்று. “பிரவேச பண்டிதம்”, “பாலபண்டிதம்”, “பண்டிதம்’ என்ற மூன்று தேர்வுகள் இருந்தன. ஒவ்வொரு தேர்வுக்குமுரிய நூல்கள் மிகப்பல; அதுவரை கேட்டறியாதன. பிரவேச பண்டிதத் திற்குப் படிப்பதென உறுதி செய்து படித்து வந்தார். தேர்வுக்குரிய நான்மணிக்கடிகையும், அணி இலக்கணமும் வாங்கிக் கொள்ளக் கூடாமையால் அவற்றை இரவலாகப் பெற்றுக் கையால் எழுதி வைத்துக்கொண்டு படிப்பா ராயினர். அவ்வாண்டில் எண்மர் தேர்வுக்குச் சென்றனர். அவருள் இருவர் முதல்வகுப்பில் தேர்ந்தனர். அவ்விருவருள் நம் நாட்டார் ஒருவர். மதுரைத் தமிழ்ச் சங்கவிழாவில் தேர்வின் பொருட்டு ஏற்படுத்தியிருந்த ப ரி ேச ய ன் றி இலக்கணத்திற்கெனச் சிறப்புப் பரிசு ஒன்றும் பெற்ருர். பரிசாகப் பெற்ற தொகை முழுவதையும் கொண்டு அடுத்த தேர்வுக்குரிய நூல்களை அப்பொழுதே வாங்கினர். பின்னர், பால பண்டிதத்திற்குரிய பாடங்களை முன்போலவே ஊக்கத் துடன் கற்ருர். அடுத்த ஆண்டிலேயே தேர்வு எழுதினர். அவ்வாண்டில் பாலபண்டிதத் தேர்வில் நாட்டார் ஒருவரே தேறினர். அதுவும் முதல் வகுப்பில் தேறியிருந்தார். தேர்வுகளில் நாட்டார் சிறப்பாகத் தேறியபடியால் அளவற்ற மகிழ்ச்சி அடைந்த திரு. சாமிநாத முதலியார் மூன்ருங் தேர்வாகிய பண்டிதத் தேர்வையும் தொடர்ந்து நிறைவேற்றத் தூண்டினர். நாட்டாரும் மிக முயன்று உழைத்து அதிலும் முதன்மையாகத் தேறினர்; தோடா முதலிய பொற் பரிசு களையும் பெற்ருர். ஆசிரியர் வேங்கடசாமி 1908ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி எஸ். பி. ஜி. கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த பிச்சை இபுராகிம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/101&oldid=880909" இலிருந்து மீள்விக்கப்பட்டது