பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இராகவ ஐயங்கார், கந்தசாமியார் முதலிய பெரும்புலவர்கள் குழுவில் விளங்கிய பெரும்புலவரான நாட்டார் அவர்களின் தொடர்பால் தமிழ்ப் பல்கலைக்கழகம் பேரும் புகழும் பெற்று வளர்ந்தது. நாட்டாரிடத்து நல்லெண்ணங் கொண்டிருந்த அதிபர்கள் இவருக்கு ஓய்வு பெறுங்காலம் வந்துற்ற பின்னரும் வேலை நீடிப்புத் தந்தனர். - கல்லூரித் தலைவர் கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோற்றுவித்த கரந்தைப் புலவர் கல்லூரியில் செந்தமிழ்ப் புரவலர் உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் கேட்டுக் கொண்டபடி தலைவராக இருக்க இசைந்து ஊதிய்ங் கருதாமல் பணியாற்றி வந்தனர். நாட்டாரவர்கள் தலைமையில் கல்லூரி நல்ல வளர்ச்சியுற்றது. நாட்டார் கண்காணிப்பில் இருந்த மாணவர்கள், அவரிடம் பாடங்கேட்ட மாணவர்கள் தாங்கள் காட்டார் மாணக்கர் என்று சொல்வதில் ஒரு தனிப்பெருமை கொள்வர். நாவலர் பெருந்தகை நாட்டார் சொற்பொழிவும் செய்யும்போது தாம் கூற எடுத்துக்கொண்ட பெர்ருளேத் தெளிவும், இனிழையும் அமைந்த குரலில் இயம்புவர். குறித்த கால அளவில் பேசி முடிப்பார். பேசும்போது நடித்தல், கையாட்டல், கனைத்தல், அசைத்தல் போன்ற செயல்களை அவரிடம் காண்பது அரிது. கூறியது கூ ருர். ஒருமைப் பன்மை மயக்கம் இராது.இலக்கண வழு இராது. உயர்ந்த தனித்தமிழ் நடையில் பேசுவார். பேசியதை அப்படியே அச்சுக்குக் கொடுக்கலாம். இவரது சொற்பொழிவைக் கேட்டுச் சென்ற டாக்டர் உ. வே. சாமிநாத அய்யர் அவர்கள் சென்னையிலிருந்து எழுதிய கடிதத்தில் நீங்கள் செய்த அரிய சொற்பொழிவு யாவர்க்கும் மிக்க இன்பத்தை விளைவித்ததாதலின் எல்லாரும் மகிழ்ந்து கொண்டே யிருக்கிருர்கள். எல்லாருடைய மனத்தையும் அது கவர்ந்துவிட்டது' என்று குறித்திருக்கின்ருர்கள். ஆங்காங்கே தலைமைதாங்கி நடாத்திய ஆண்டு விழாக்கள் ஒருபுறமிருக்க, சென்னைப் பல்கலைக் கழகத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/103&oldid=880913" இலிருந்து மீள்விக்கப்பட்டது