பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 களுக்கும் பொருள் கூறுங்கால் அ ன் பி ன ல் கண்ணிர் பெருக்குவார். கேட்பாரையும் கசிந்துருகச் செய்துவிடுவார். அத்தகைய கனிந்த .ெ சா ல் வ ன் ைம யு ைட ய வ ர். இறைவனிடத்து இளமை தொட்டு வளர்ந்த இடையருப் பேரன்பு உடையவர். மறக்குலத்து வந்த மாண்பினராகவே மாணவர்க்கு வீரத்தைப் புகட்டுவதில் பெருவிருப்பு உடையவர். குற்றங் கண்டவிடத்து இடித்துரைத்துத் திருந்த வழிகாட்டும் பெருந்தகையார். அறநாட்டமுடைய நாட்டார் பயனில் சொல் பேசுதல், வீண் பொழுது போக்குதல், பிறர் ஆக்கம் கண்டு அழுக்காறு கொள்ளல் முதலிய தீய இயல்புகள் அணுகுதற்குச் சிறிதும் இடங்கொடாதவர். நாட்டார் காட்டும் வழி தமிழைக் காத்து வளர்த்தற்குரிய வழிகளை ஆன்றேர்கள் நமக்கு அவ்வப்போது எடுத்துக்கூறி நம்மைச் செயல்படுத்தி வருகின்ருர்கள். இம்முறையில் வேங்கடசாமி நாட்டாரவர்கள் தமிழைக் காக்க எடுத்துக் காட்டும் வழியைக்கண்டு அவர் கூறும் அநுபவ உரைகளுக்குச் செவிமடுத்து அவற்றின் வழி நின்று செயலாற்றிப் பயன் பெறுவோமாக அவர் கூறுகின் ருர். 'பிறமொழிச் சொற்களை எடுத்துக்கொள்வது குற்றமின் ருயினும், அவற்றை வரம்பின்றிப் புகுத்துவது தமிழின் தூய்மையையும் அழகையும் சிதைத்து அதன் தொன்று தொட்ட மாண்பினைக் கெடுப்பதாகும் என்பதைக் கருத்தில் இருத்தல் வேண்டும். இக்காலத்துப் புதிய கலைகள் பலவும் எழுதுதற்குச் சொற்கள் பல வேண்டும் என்பது உண்மை யாயினும், அதன் பொருட்டுத் தமிழினைத் துருவி யாராய்ந்து வேண்டுஞ் சொற்களைக் காண்டலும் அவை போதாவிடத்துத் தமிழ்ப் பகுதியினின்று புதிய சொற்களை ஆக்கிக் கொள்ளு தலும், இன்றியமையாத வழிப் பிறமொழிச் சொற்களை ஏற்றுக் கொள்ளுதலுமே அறிவும் ஊக்கமும் முயற்சியும் உடையார்க்கு அழகாவனவாம். அந்நெறியே கலைப்பயிற்சியை எளிதாக்கு வதுமாம.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/105&oldid=880917" இலிருந்து மீள்விக்கப்பட்டது