பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய ஒருமைப்பாட்டு உறுதிமொழி இந்தியா என்னுடைய நாடு. இந்நாட்டில் வாழ்கின்ற ஆண், பெண் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள். என் நாட்டின்பால் நான் அன்புடையேன். அதனுடைய El I ETT LIMIT ETT பலவகைப்பட்ட பண்பாட்டியல்புகளை நினைந்து பெருமையடைகிறேன். இத்தகைய பழம் பெருமையுடைய நாட்டின் குடிமகனக இருத்தற்குரிய தகுதிகளை அடைய நான் முயல்வேன். என்னுடைய பெற்ருேரிடத்தும், ஆசிரியரிடத்தும், ஏனைய பெரியோரிடத்தும் பணிவுடன் நடந்து கொள்வேன்; அனைவரிடத்தும் பண்புடன் பழகுவேன். என்னுடைய நாட்டிற்கும், அதனுடைய மக்களுக்கும் தொண்டு செய்ய உறுதி கூறுகிறேன். என் நல்வாழ்வு அவர்தம் கலத்தையும் வளமான வாழ்க்கையையுமே பொறுத்திருக்கின்றது. - தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தாய் நாட்டின் உரிமையையும் ஒருமைப்பாட்டையும் எப்பாடு பட்டாகிலும், என்ன தியாகம் செய்தாகிலும் காக்க மக்கள் மேற்கொண்டுள்ள எண்ணத்தில் (சங்கற்பத்தில்) எ ன து உ று தி ைய மீண்டும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நாடு வலிவுறவும் ஒற்றுமை வலுப்பெறவும் உறுதியான உள்ளத்துடன் பாடுபட உறுதி கூறுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/11&oldid=880927" இலிருந்து மீள்விக்கப்பட்டது