பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் கல்வியும் வேண்டுமன்ருே ? ஒரு நாடு கேவலம் தொழிலையே வளர்க்க நினைப்பது ஒருவன் உடலையே வளர்க்க நினைப்பதை ஒக்கும். எவ்வளவுதான் முயன்ருலும் எவ்வெவற்றை உண்டாலும் உடல் குறிப்பிட்எல்லையளவு பெருகிப் பின் குறையைக் காண்கின்ருேம். அது போலத்தானே ஒரு நாடும். மலே, ஒருங்ாட்டின் வளர்ச்சிக்கு அறிகுறியா ? அன்றிக் கடல் தாழ்ச்சிக்கு அறிகுறியா ? புற வளர்ச்சிக்கு ஒர் எல்லையுண்டு; அகவளர்ச்சிக்கு எல்லே இல்லை; ஆதலின், நாட்டின் நிலையான வளர்ச்சிக்குக் கல்வியே உயிர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. கிள்ளி : பசலையார் கருத்து என்னெஞ்சிற் பசுமரத் தானிபோற் பதிகின்றது. நீருஞ் சோறும் ஏனை உயிர்கள் போல மக்கட்கு இன்றியமையாதவையேயாம். என்ருலும் அவை வாழ்வின் குறிக்கோளாகுமா ? இதனைப் பரப்ப அரசு யாது செய்யவேண்டும் ? பச8லயார் : கின் மறவர்கள் படைக்கலம் பயின்று பயின்று உயிர்களைக் கொடுத்துக் கொடுத்து விரவுணர்ச்சியைக் கற்க வில்லை. உயிர்களைக்கொடுத்த அஞ்சாத நெஞ்சிைேர்க்குப் பிறந்தமையினலே மறத்தன்மையை இயல்பிற் பெற்ற கல்லா மறவர்கள். அதுபோல நின் குடி மக்கள் கல்லாத் தொழி லாளிகள். செய்திறம் வாய்ந்த தொழிலாளர் குடும்பத்துப் பிறந்து வளர்ந்த முறையினலேயே தாமும் தொழிலில் வல்ல வர்கள். அவ்வன்மை அவுர்களுக்கு ஏடு கற்ற கல்வியான் அமைந்ததன்று. ஆதலின் மறவர்க்கும் ஏனை மக்கட்கும் தாம் செய்யும் தொழிலைப்பற்றிய அறிவு வேண்டும். ஊர் தோறும் அவ்விடத்து இருக்கும் தொழிலுக்கேற்ற தொழிற் கல்விக் களங்களை அரசு அமைத்தல் முதற்கடன். அதன் பின்னர், வாழ்வினைப் பற்றியும் உலகம் பற்றியும் கற்பதற்கு அறிவுக் கல்வி நிலையங்கள் நிறுவுதல் வேண்டும். (கின்று பேசியவர் இடத்தில் அமர்கின் ருர்.) கோவூரார்: (பசலையாரைப் பார்த்து) உரிய போழ்தில் அரிய கருத்தை வெளியிட்டீர் (கை குலுக்குகின்ருர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/111&oldid=880932" இலிருந்து மீள்விக்கப்பட்டது