பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ஐக்கிய நாடுகள் சபை திரு. சா. நடராசன், பி. ஏ. பி. டி. / மிகப் பழங்காலந்தொட்டே உலகின் எல்லாப் பகுதி களிலும், எல்லாக் காலங்களிலும் போர்கள் நிகழ்ந்து வந்திருக்கின்றன. பண்டைய அரசர்கள், அண்டை அயல் நாடுகளின்மீது போர் தொடுத்து, அவற்றைத் தம் ஆட்சியின் கீழ்க்கொண்டு வருவதைத் தமக்குப் பெருமை என்றெண்ணி வந்தனர். இவ்வாறு வலியார் மெலியார்மேற் பொருதல் யாண்டும் நிகழ்ந்து வந்த செயலாகும். மன்னன் ஒருவன் இவ்வழியில் புகழடையக் கருதிைைகில் அதை கிறை வேற்றுகையில் எத்தனை ஆயிரம் மக்களைக் காவு கொடுத்து அப்புகழை எய்தவேண்டியிருக்கும் இக்கொடிய விளைவு பற்றிய எண்ணமும், அதனடியாகப் பிறக்கும் ஈவிரக்கமும் அவனுக்குத் தோன்ருவோ ? அ.து எவ்வாருயினும் இதுகாறும் மனித வரலாற்றின் பெரும்பகுதி போர்களின் வரலாருகவும், பேரழிவின் வரலாருகவும் காட்சி தருகின்றது. மனிதன் அறிவிலும் நாகரிகத்திலும் முன்னேறுவதற்கேற்பப் போர் முறையிலும் அழிப்புத் திறத்திலும் தன் வல்லமையை மேன்மேலும் வளர்த்துக்கொண்டு வருகிருன். போக்கு வரவுச் சாதனங் களும், செய்தியைப் பரப்பும் சாதனங்களும் வெகுவாக முன் னேறிய காரணத்தால், போர்களும் உலகின் ஒரு கோடியி லிருந்து மற்ருெரு கோடிக்கு விரைவில் பரவுகின்றன; போர்க் களங்களும் விரிவடைகின்றன. போர்கள் முதலில் தரையில் நிகழ்ந்தன. பின்னர், கடலில் நிகழ்ந்தன. இந்த நூற்ருண் டில், வானிலும் நிகழ்கின்றன. இனிமேல் அண்டவெளியிலும் அண்டை மண்டலங்களிலும் போர் .ெ த ா டு ப் பி னு ம் தொடுக்கலாம். இந்தப் போர்களினல் பழிபாவமற்ற எண்ணற்ற இளைஞர் கொல்லப்படுவதோடு எங்கணும் சொல்லொனத் துன்பங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/116&oldid=880942" இலிருந்து மீள்விக்கப்பட்டது