பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 நாகரிகத்தை வளர்த்தனர்; சுமேரியரது நாகரிகம் நகரங்களில் தோன்றி வளர்ந்தது; இவ்வாற்று வெளியில் எழுந்த நகரங் களாகிய நிப்பூர், ஊர், எரெக் என்பவை நாகரிகத்தில் சிறப்புற்று விளங்கின. *. வாழ்க்கைமுறை முதலில் புற்களாலும், களிமண் சுவர்களாலும் வீடுகள் அமைத்துக்கொண்ட இம்மக்கள் காளாவட்டத்தில் வெயிலில் காயவைத்த செங்கற்களைக் கொண்டு வீடுகள் கட்டிக் கொண்டனர். ஆறுகள் தரும் செழிப்பான வி ண் ட ல் மண்ணில் கோதுமை, பார்லி, அத்திப்பழம் முதலியவற்றைப் பெருவாரியாகப் பயிரிட்டனர்; உலகிலேயே முதன் முதலில் கோதுமை பயிராகியது இவ்வாற்று வெளியில்தான் என்பது வரலாற்ருசிரியர்களுள் சிலர் கருத்து. இவையும், பேரீச்சம் பழம், மீன். ஊன் இவையும் இவர்களது உணவு. துண்டில் முள், வலை முதலியவற்றைக் கொண்டு மீன் பிடித்தனர். சக்கரங்களைச் செய்து வண்டிகளை ஓட்டத் தெரிந்த முதல் மக்கள் சுமேரியரே. ஆறுகளையும் கால்வாய்களையும் அடுத்த பசும்புல் வெளிகளில் ஆடுமாடுகளை மேய்த்து, ஆட்டு மயிரைக்கொண்டு கம்பள ஆடை நெய்தனர். பின்னல் பருத்தி ஆடையும் நெய்யக் கற்றுக் கொண்டனர். துணிகளுக்கு அழகிய வண்ணங்களைக் குழைத்துச் சேர்க்கும் தொழிலை யறிந்தனர். பொன், வெள்ளி அணிகலன்களும், செம்பு, கல் கருவிகளும் அவர்களிடையே வழக்கத்திலிருந்தன. தங்களை வடக்கு, வடகிழக்கு, வடமேற்குப் பகுதிகளிலிருந்து அடிக்கடி தாக்கித் துன்புறுத்தி வந்த காட்டுமிராண்டிகளிடம் இருந்து காப்பதற்காக ஈட்டி, கேடயம் முதலிய போர்க் கருவிகளைச் சுமேரியர் வைத்திருந்தனர். எழுத்தும் இறைவழிபாடும் முதலில் கருத்துக்களைச் சிறு படங்களாக எழுதிய இம்மக்கள், பிற்காலத்தில் 350 வகையான ஒலி வகைகளைக் காட்டும் குறியீடுகளை ஆப்பு வடிவத்தில் எழுதினர். அவர்கள் தங்களது நூல்களைக் களிமண் தகடுகளில் எழுதினர். வணிகர் வைத்திருந்த களிமண் தகடுகள் இந்தியருக்கும் o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/125&oldid=880965" இலிருந்து மீள்விக்கப்பட்டது