பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 திருமண முறை பாபிலோனிய சமுதாயத்தில் செல்வர், நடுவகுப்பார், அடிமைகள் என்ற பிரிவுகளுண்டு. செல்வரிடத்துக் குற்றஞ் செய்தோருக்கு இரட்டிப்புத் தண்டனை உண்டு. பொருள்களை வாங்கும் செல்வரும் இரட்டிப்பு விலை கொடுக்க வேண்டும். அடிமைகளுக்கு மற்றவருடன் மண உறவுகொள்ளும் உரிமையைச் சட்டம் அளித்தது. மணத்தில் சமயச் சடங்கு களில்லை. மனைவி என்ற நிலையை அடைந்து விட்டதாகச் சான்று இதழ் ஒன்று அவர்களுக்கு அளிக்கப்பட்ட்து. மணமகன் பெண்ணின் தந்தைக்குப் பரிசு கொடுப்பதும், மணப்பெண் தன்னுடன் வீடு, தோட்டம், அடிமைப் பெண், நகைகள் முதலியவற்றைப் பரிசாகக் கொண்டு வருவதும் பழக்கத்திலிருந்தன. மணமுறிவைப் பெண் விரும்பினல், அவள் கொண்டுவந்த பொருள்களில் பாதியை மணமகன் வீட்டுக்காரர் வைத்துக் கொள்ளுவார். குழந்தைகளை எடுத்து வளர்க்கும் உரிமை இருந்தது. பெண்களுக்குத் தந்தை, கணவர் ஆகியோரின் செல்வத்தில் பங்குபெறும் உரிமை இருந்தது. ஆட்சி முறை பாபிலோனிய அரசரில் பெரியவன் அம்முராபி என்பான் கி. மு. 2100இல் ஆட்சி செய்தவன்; ஒரு கல்லில் அவன் பகலவக் கடவுளிடமிருந்து சட்டங்களைப் பெறுவதாக ஓவியம் வரையப்பட்டுள்ளது; அதன் கீழே அவன் தொகுத்து வைத்துள்ள சட்டங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ஆட்சி அலுவலாளரை நிறுவிக் கைக்கூலி பெறுவோரை ஒறுத்து ஆட்சி செய்தான். நெறிமுறை மன்றிங்களை அமைத்துச் சிறு குற்றங்களுக்கும் கடும் தண்டனைகளை அளித்தான். பல்வேறு தொழிலாளர்களுக்குக் கூலியும் இவனது சட்டத் தொகுப்பில் வரையறை செய்துள்ளான். _-* சிந்துவெளி நாகரிகம் சுமேரிய, பாபிலோனிய நாகரிகங்களைப் போலக் காலத்திலும், தன்மையிலும் ஒத்து விளங்குவது நம் காட்டுச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/128&oldid=880972" இலிருந்து மீள்விக்கப்பட்டது