பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சிந்து வெளியில் கி. மு. 3500இல் தோன்றிய நகர் நாகரிகம். பஞ்சாப், சிந்து கிலப்பிரிவுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள மொகஞ்சதாரோ, ஹாரப்பா நகரங்களே இதற்குச் சான்று. நீண்ட நேரான, அகன்ற .ெ த ரு க் க ள், பெரிய வீ டு க ள், ஒவ்வொன்றிலும் குளிப்பதற்குக் கிணறு, அறைகள், கழி நீர்க்கால்கள், ஊருக்குப் பொதுவான குளிக்கும் குளங்கள் ஆகிய வசதிகள் இம்மக்களின் தூயவாழ்க்கை விருப்புத்தை விளக்குகின்றன. கோதுமை, பார்லி. பருத்தி பயிரிடல், நெசவு, மேற்காசியாவுடன் வாணிகம், செம்பு, கல், பொன், வெள்ளி, மரம் இவற்றில் கருவிகளும் கலன்களும் செய்தல், சிறுவர்களுக்கு வேண்டும் சிறு வண்டிகள், ஊது குழல், சிற்றுருவங்கள், கோலி முதலியன செய்தல், கல்லிலும், வெண்கலத்திலும் உருவங்கள் செய்தல் முதலியன இவர்களது தொழில்கள். அவர்களது களிமண் தகடுகளில், மூன்று முகங்களையுடைய ஒர் ஆணின் உருவம், மீன், திமிலுள்ள காளை முதலியவை வரையப்பட்டுள்ளன. ஒரு பெண் கடவுளையும் முத்தலை ஆண் கடவுளையும், திமில் காளையையும், இலிங்க வடிவிலுள்ள கற்களையும் வழிபட்டனர் இம்மக்கள்: சிறு படங்களையே இவர்கள் எழுத்துக்களாக எழுதினர். இவர்களது வழிபாட்டு முறையே பிற்காலத்தில் ஆரியரால் விரிவாக்கப்பட்டது. குதிரையும் இரும்பும் இவர்கள் அறியாதன. எனவே இவர்களுடைய நாகரிகத்தைச் சுமேரிய நாகரிகத்தைப் போலவே வெண்கலக் கற்கால நாகரிகம் எனக் குறிப்பிடுவர். இதனை வேதகால இந்திய ஆரிய நாகரிகமே என ஒரு சிலர் குறிப்பிட்டாலும், சிந்து வெளி மக்களின் எழுத்து அமைப்பும், சமய வழிபாடும், நகரச் சிறப்பும், அவர்களது நாகரிகத்தை இந்தியாவின் மூத்த குடியினரான தமிழ் அல்லது திராவிடரின் நாகரிகமே எனக் காட்டும் என்று அண்மையில் காலஞ் சென்ற வரலாற்றுப் பேராசிரியர் ஈராசுப் பாதிரியார் கூறியது கவனிக்கத்தக்கது. அருஞ்சொற்பொருள்: வண்மையான - வளமையான; க ா ல் க ள் - வாய்க்கால்கள்; வழுத்துவதற்கு-வாழ்த்துவதற்கு, கூளி-பேய்; ஒறுத்து - தண்டித்து;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/129&oldid=880974" இலிருந்து மீள்விக்கப்பட்டது