பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 மேலும் கல்யாழ்' (பதிற்றுப் பத்து-41), கல்யாழ்' (புறம் 170) என்ருற்போல யாழைப்பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் நன்மை அடைகொடுத்துக் கூறியுள்ளமையை .ே நா க் கி ன ல், பழந்தமிழர் யாழிடத்துக்கொண்டிருந்த நல்லார்வமும், நற்பற்றும் தெற்றென விளங்கும். யாழ் ஒரு தெய்வம் எனவும் போற்றப்பெற்றுள்ளது. யாழ் மறைவிற்குக் காரணங்கள் : யாழை இயக்குவதில் தனித் திறன் பெற்றிருந்தவர் பாணர் ஆவர். பிற பல இசைக் கருவிகளை இயக்குபவர்களை விடப் பாணருக்கு ஏற்பட்ட புகழும் செல்வாக்குமே யாழின் அன்றைய பெருமையை விளக்கும். இங்ங்னம் ஒரு கலைக்கு ஒரு பிரிவினர் என ஒதுக்கியமையே, பிற்காலத்தில் அதன் மறைவை விரைவுபடுத்தும் கருவியுமாயிற்று. நாட்டியக் கலையை ஒரு சாரார்க்கு உரியதென ஒதுக்கி வந்தமையால் அக்கலை நலிவுற்றதும், தமிழைப் பண்டிதர்களுக்கே' உரிய தெனச் சில காலத்திற்கு முன்வரை ஒதுக்கியமையால் அதன் வளர்ச்சி நிலைகுன்றியிருந்ததும் இதைேடு ஒருசேர வைத்து எண்ணற்பாலன. பாணரின் சமுதாயச் செல்வாக்கை ஒழித்து, அவர்களைத் தாழ்வுப்படுத்திப் புறக்கணித்தமையே மிகச் சிறந்த யாழையும் கைவிடக் காரணமாயிற்று எனலாம். இங்ங்ணம் வாழ்வோடு கலந்து, இமயம் முதல் குமரிவரை யாழ் பரவியிருந்தது. வட நாட்டின் வீணே எனும் கருவியைச் சீர்திருத்திக் கொள்ளவும் உதவிற்று. பல்லவர் காலத்தில் தான் வினை தென் திசையை எட்டிப்பார்த்தது. பல்லவ மன்னன் மகேந்திரப் போத்தரையன் வீணையை இயக்குவதில் வல்லவனுக விளங்கினன். அவன் பரிவாதினி என்ற வினையைத் திறம்பட இயக்கினன். குடுமியான் மலையிலுள்ள கல்வெட்டுக்களில் வீணை'யைப் பற்றிய விவரங்களை அவன் செதுக்கி வைத்துள்ளான். அவன் சமணகை இருந்தமையால் பிற மதத்தார் தழுவிய யாழுக்குப் பகையாக வீணையைச் சிறப்பித்தான். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி' அல்லவா? இதல்ை யாழும், அதைத் தழுவி நின்ற தமிழிசையும் புகழ் மங்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/134&oldid=880986" இலிருந்து மீள்விக்கப்பட்டது