பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. சிந்தையள்ளும் சீரு திரு சி. நயினும் முகம்மது, எம். ஏ. உமறுப் புலவரின் பரம்பரை சீருப்புராணம் இசுலாம் கண்ட இன்பத் தமிழ்க் காப்பிய மாகும். சீருப்புராணம் இயற்றிய உமறுப் புலவர் நபிநாயகமவர் களின் அன்பைப்பெற்ற பெரியாரின் மரபிலே தோன்றியவர். செய்கு முகம்மதலி எனும் பெரியார், இவரின் தந்தையாவர். தமிழகத்தே வணிகம் குறித்து அரேபியாவிலிருந்து வந்த பரம்பரையைச் சேர்ந்தவர். அத்தர் போன்ற மணப் பொருள்களை மன்னர்க்கும் மற்ருேர்க்கும் தந்து மணம் பரப்பியவர். இவருடைய பிள்ளையும் கவிதை மணம் பரப்பும் கவிஞராக விளங்கினர். - எட்டையபுர மன்னர் முடியுடை மூவேந்தரும் குறுநில மன்னரும் போற்றி வளர்த்த தமிழுக்கு ஆங்கில ஆட்சியிலே அரசின் ஆதரவு இல்லை. என்ருலும், பாளையப்பட்டைப் புரந்த பாளையக்காரர் களும் பெருநிலக்கிழாரும் தமிழ் வளர்க்கும் பணியில் தலைப் பட்டார்கள். அவர்களுள் எட்டையபுரத்து மன்னர்களும் முன் கின்றனர். 'சொன்னலமும் பொருண லமும் சுவைகண்டு சுவைகண்டு துய்த்துத் துய்த்துக் கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல் தமிழ்ச்சுவை......... f : தேர்ந்தார்கள். கடிகைமுத்துப் புலவர் இவர்தம் அவைக்களப் புலவராகக் கடிகைமுத்துப் புலவர் விளங்கினர். கவிதைத் தேன் பாய்ச்சி எட்டப்பனைக் களிப்பில் திளேக்கச் செய்து வந்தார். கவிமணங் கமழும் கடிகைமுத்துப் புலவரும் நறுமணப் பொருள் வணிகர் சேகு முதலியாரும் அன்பால் பிணைக்கப் பெற்ற நண்பராயினர். வணிகரின் மகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/137&oldid=880991" இலிருந்து மீள்விக்கப்பட்டது