பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 உமறு அழகிய உருவும் அறிவின் செறிவும் இளமையின் வளமையும் இனிய இயல்பும் அமைந்த அருமை இளைஞர். இளைஞரின் தோற்றப் பொலிவால் கவரப்பெற்ற புலவர். சுடர்வீசும் மணியாக ஒளியேற்றுவதற்குரிய வயிரமொன்று கிடைத்ததெனக் கருதினர். பட்டை தீட்டும் பணியைத் தொடங்க முற்பட்டார். உமறின் கலைப் பயிற்சியைத் தாமே மேற்கொண்டார். இதுகண்ட வணிகர் பெரிதும் மகிழ்ந்தார். உமறு கல்வி கற்றல் * உமறு இருவென இருந்து சொல்லெனச் சொல்லி... செவி வாயாக நெஞ்சு களஞகத் தமிழமுது உண்டார். தமிழ் இலக்கிய இலக்கணக் கடல் நீங்தி ஒரு கரையும் கண்டார். இளமையிலேயே புலமையினை வளமுறப் பெற்ருர், புலமை வெற்றி பெரும் புகழ்பெற்ற அருஞ் சான்ருேரின் வாழ்விலே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளே வாழ்வின் திருப்பங்களாக அமைந் துள்ளன. பொன் சுட்டால்தானே சுடர்வீசும்! சோதனைகள் வந்துற்றபோதே, சான்ருேர்தம் பு க ழு ம் பரவுகிறது! வாலவாருதி என்னும் வடநாட்டுப் புலவைெருவன் புலமைப் போர் செய்து புகழை நாட்டிவந்தான். எட்டையபுரத்திற்கும் வந்து வாது செய்ய முற்பட்டான். கடிகைமுத்துப் புலவர் வாலைவாருதியோடு வாது செய்ய வேண்டுமென மன்னரும் உரைத்து விட்டார். மந்திரமும் தந்திரமும் கொண்டு புலவர் பலரை வென்று வந்த வாலைவாருதியோடு வாது செய்ய வேண்டிய நிலை புலவருக்கு நேர்ந்தது; உடல் நிலையும் குலைந் `திருந்தது. குறிப்பிட்ட காலமும் வந்தது. கடிகைமுத்துப் புலவர் புலமைப் போரில் கலந்துகொள்ள இயலாமைக்குப் பெரிதும் வருந்தினர்; கவலையின் உருவாக இருந்தார். ஆசிரியரின் கவலையைக் கண்ட இளம் மாணவர் அவைக்களம் சென்று அரியேறுபோல வாலவாருதியை வென்று வெற்றி முரசு கொட்டி அனைவரையும் வியப்புக்கடலில் மூழ்கச் செய்தார். அன்றுமுதல் ஆசிரியரின் ஆசிபெற்று அவைக் களப்புலவராக அமர்ந்து அரசவையின் அன்பைக் கவர்ந்தார். கவிதையமுதை எட்டப்பனுக்கு நாள்தோறும் வழங்கி வந்தார், த-சோ-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/138&oldid=880994" இலிருந்து மீள்விக்கப்பட்டது