பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சிருப்புராணம் இயற்றுதல் வள்ளல் சீதக்காதி, நபிநாயகத்தின் வரலாற்றைக் காப்பிய மாக வடித்துத் தருகின்ற கவிஞரைத் தேடிக்கொண்டிருந்தார். உமறுவின் உயரிய புலமையைக் கண்டு வள்ளல் உள்ளம் மகிழ்ந்தார். கவிஞரை அழைத்துக் காப்பியம் பாடத் செய்தார். அந்தோ! புலவரையும் இரவலரையும் ஏங்க விட்டுச் சீதக்காதி இறுதி எய்திவிட்ார். மண்ணுலகில் மாரியென வாரி வழங்கிய வள்ளல் விண்ணகத்தில் வண்மை செய்யச் சென்றனர் போலும்! கதிரவனைப் பிரிந்து, காரிருளில் சிக்கிய நிலமடந்தை போல் துன்புற்ருர் புலவர். கிலமகளை விழுங்கி கிற்கும் பேரிருளைத் தண்ணிலவு வீசிடும் வெண்ணிலா அகற்றிவிடுமல்லவா ? புரவலரை இழந்து புலம்பி கின்ற புலவருக்கு அஞ்சற்க என்று அபயக்குரல் எழுப்பினர் அபுல் காசிம். வள்ளல் அபுல் காசிமின் பெருந் துணையால் அருந்தமிழ்க் காப்பியத்தைக் கவிஞர் இயற்றினர். புரவலரின் பெருங் கருணையால் பரங்கிப்பேட்டையில் கவிஞர் காப்பியத்தை அரங்கேற்றினர். சீருவின் சிறப்பியல்பு சீருப் புராணம் என்பது சீரு, புராணம் என இரு சொற் களாக விரியும். சீரு என்னும் சொல் அரபிச் சொல்லாகும். வரலாறு என்பது இதன் பொருளாகும். புராணம் என்ருல் பழைய வரலாறு என்று பொருள். ஆகவே, இத்தொடர் நபிநாயகத்தின் வரலாறு என்ற பொருளைக் குறிக்கும். சீரு என்பது ஜீராவின் திரிபு எனக் கொண்டோமாயின் பாகென இனித்திடும் பாடல்கள் பயின்றிடும் காப்பியமெனப் பொருள் படும். இதனைத் தமிழ்ச் சொல்லாகக் கொண்டால் சீர்-ஆ என்றும் விரியும். சீர் ஆ என்று பிரிந்து வியப்புணர்ச்சி யைப் பெருக்குகிறது. ஆ எவ்வளவு சிறப்புடைத்து இது ! என வியக்கத்தகும் இலக்கியப் படைப்பே, இக்காப்பியம். காப்பியம் தொடங்கும் மரபு பாட்டோ காப்பியமோ மங்கலச் சொல்லால் தொடங்கப் பெறுதல் தமிழ் மரபாகும். இந்நூல் திரு என்னும் சொல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/139&oldid=880996" இலிருந்து மீள்விக்கப்பட்டது