பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 அறம் தவறி மறம் தழுவி அழிவிலே வீழ்ந்து மக்கள் துன்புறுகின்ற காலத்திலேதான் சீர்திருத்தம் தேவைப் படுகிறது. சீர் கெட்டுச் சிதைவுற்ற மக்களைச் சீர்திருத்தவே சீர்திருத்தவாதிகள் தோன்றுவார்கள்; சிறந்து வாழ வழி வகுப்பார்கள். ஒரு சீர்திருத்தவாதி தோன்றியுள்ளார் என்ருல் .மூன்று கருத்துக்கள் முன்னிற்கும். அன்வயாவன : அவர் தோன்றிய காலத்து மக்களின் நிலை, அங்கிலைக்குரிய காரணம், அவர் பிறப்பால் அமைந்த சிறப்பு. இவ்வொரு பாடலிலே இம்மூன்று கருத்துக்களும் ஒருங்கே பொருந்தியுள்ளன. நெடுநிலமெங்கும் நெறிநிலை திரிந்திருந்தது; மருள் மிகுந்த மதங்கள் மலிந்திருந்தன. துறவறம் தவறியிருந்தது: இல்லறமும் கெட்டிருந்தது; இத்துன்பங்லைக்குக் காரணம் தூய கடவுள் வணக்கத்தை விட்டுப் பிறவற்றை வழிபட்டு வந்தார்கள்; உலகைக் கவ்வியிருக்கும் இருட்கூட்டம் முழுமதி கண்டதும் மறைந்துவிடும்; அதுபோல இவ்வுலகைக் கவ்வி யிருந்த குபிரெனும் இருட்கூட்டம் அகன்றிட முகம்மது நபி பிறந்தனர் என்று கூறுகின்ருர். ஆனால், நபி நாயகத்திற்கு முழுமதியை உவமை கூறும்போது கவிஞர் மிக நுட்பமாகச் சொற்களை அமைக்கின்ருர். மதியென்று மட்டும். கூருது கலையெலாம் நிரம்பிய முழுமதியென்று சொல்லுகின் ருர். மேலும், முழுமதியிடத்துக் களங்கம் உண்டு. முழுமதிபோல்' என்று மட்டும் கூறிவிட்டால் மனிதப் புனிதராய நபிநாயகத் திடமும் களங்கமிருப்பதாகக் க ரு த ப் ப டு ம். எனவே எச்சரிக்கையாக "மறுவிலா தெழுந்த முழுமதிபோல, முகம்மது நபி பிறந்தனரே என்று கூறிய நயம் இன்பம் பயப்பதாகும். இதன் மூலம் நாயகத்தின் பிறப்பால் நானிலம் சிறப்படைந்தது என விளைவையும் கூறிவிடுகின்ருர். கற்பனை வளம் பொருளே உயிராகவும் சொல்லே உடலாகவும் கொண்ட கவிதைக் காரிகைக்குக் கற்பனையே நல்லுடையாக அமை கின்றது. கற்பனையற்ற கவிதை உடையற்ற பெண் போன்றே வனப்பற்றிருக்கும். கவிதைக் கன்னிக்குக் கண்ணக் கவரும் வண்ண உடைகளை உடுத்தியுடுத்திக் களிக்கின் ருர் கவிஞர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/141&oldid=881002" இலிருந்து மீள்விக்கப்பட்டது