பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வருகின்றனவோ, அதே மாதிரி மத்தியிலுள்ள உட்கருவைச் சுற்றி எலெக்ட்ரான்கள் சுற்றுகின்றன. எலெக்ட்ரான்கள் எதிர்முக (Negative) மின்சாரமேறிய பகுதிகளாகும். மத்திய 5(5, Gibstops (Positive) மின்சாரமேறிய பகுதியாகும். சு ற் றி வ ரு ம் எலெக்ட்ரான்களின் எண்ணிக்கையையும், மத்தியிலுள்ள கருவையும் பொறுத்துத் தனிப் பொருளின் தன்மை, எடை முதலியன மாறுபடுகின்றது என்று அணுவைப் பற்றிப் புதிய கோட்பாட்டை ருதர்போர்டு உலகுக்குத் தெரிவித்தார். இந்த அணுக் கருவில் ஏராளமான ஆற்றல் கட்டுண்டிருப்பதாகவும், அணுக் கருவைப் பிளந்து மாபெரும் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடுமென்றும் கூறினர். எல்லா அணுக்களும் தங்களின் கருக்களில் பேராற்றலைத் தேக்கி வைத்திருக்கின்றன. சில அணுக்கள் தங்க்ள்’ ஆற்றலைத் தாமாகவே .ெ வ ளி யி ட் டு க் கொண்டேயிருக்கின்றன. யுரேனியம், ரேடியம், தோரியம் முதலிய பொருள்களிலிருந்து இடைவிடாது ஆற்றல் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. 1896 ஆம் ஆண்டு பெக்குரல் என்ற பிரெஞ்சு விஞ்ஞானி யுரேனியக் கூட்டுப் பொருள்களின்மேல் சோதனை செய்தார். இருளிலும் கூட அப்பொருள்கள் ஒளி வீசுவதைக் கண்டார். புகைப்படத் தட்டுக்கள் யுரேனியத்திலிருந்து வெளிப்படும் கதிர்களால் தாக்கப்படுவதைக் கண்டார். இக் கதிர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை யென்றும் கண்டார். யுரேனியத்திலிருந்து வெளிப்பட்ட கதிர்களை ஆல்பா (Alpha) பீட்டா (Beta), காமா (Gamma)க்கதிர்கள் என்று அழைத்தார். ஆல்பாக் கதிர்கள் நேர்முக மின்சாரம் கொண்டவை; கனமிகுந்தவை. அவைகளின் .ே வ க ம் ஒரு செகண்டுக்கு 32,200 கிலோ மீட்டர்கள். பீட்டாக் கதிர்கள் எதிர்முக மின்சாரங்கொண்டவை. ஒளியைப்போல் செகண்டுக்கு சுமார் 2,63,340 கிலோ மீட்டர்கள் செல்லும் வேகமுடையன. இவைகளுக்குப் பொருள்களின் வழியாக ஊடுருவிச் செல்லும் சக்தி மிக அதிகம். காமாக் கதிர்கள் மின்சார மற்றவை. மிகவும் சக்தி வாய்ந்தவை. எக்ஸ் கதிர்களின் (X-rays) தன்மையுடையவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/145&oldid=881009" இலிருந்து மீள்விக்கப்பட்டது