பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 யுரேனியத் தாதுக்களை ஆராய்ந்து கொண்டிருந்த பேராசிரியர் குயூரியும், அவர் மனைவி குயூரி அம்மையாரும் யுரேனியத்தைவிடப் பல்லாயிரமடங்கு ஆற்றல் வாய்ந்த கதிர்களைக் கொண்ட ரேடியம் என்னும் தனிப் பொருளை 1910ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்கள். ஒரு ரேடியம் அணுக்கருவில் 226 புரோட்டான்களும் 138 எலெக்ட்ரான் களுமிருக்கின்றன வென்றும், அதைச்சுற்றி 88 எலெக்ட் ரான்கள் சுற்றுகின்றன வென்றும் கணக்கிடப்பட்டிருக்கிறது. ரேடியம் அணுக்கள் இடையருது ஆற்றல் மிக்க கதிர்களை வெளியிட்டுக்கொண்டேயிருக்கின்றன. இக்கதிர்கள் பல பொருள்களைத் துளைத்துச் செல்லக்கூடியவை. எனவே விஞ்ஞானிகளில் பலர் இத்தகைய கதிர்களைக்கொண்டு அணுவைப் பிளக்க முயன்றனர். இக்கதிர்களைவிட மிகவும் ஆற்றல் படைத்த கியூட்ரான் (Neutran) என்னும் நடுவணுவை 1932ஆம் ஆண்டு சாட்விக் என்பவர் கண்டுபிடித்தார். இதில் மின்சாரமில்லை. இதன் எடை ஏறக்குறைய புரோட்டானின் எடைக்குச் சமம். அதாவது எலெக்ட்ரானைப்போல 1840 மடங்கு அதிக எடை உள்ளது. அணுவிலுள்ள புரோட்டான் கியூட்ரான் ஆகியவை களின் எடையே அணுவின் மொத்த எடையாகும். நீரகத்தின் (Hydrogen) கருவில் ஒரே ஒரு புரோட்டான்தானிருக்கிறது. கியூட்ரான் இல்லை. ஹீலியத்தில் (Helium) இ ர ண் டு புரோட்டான்களும், இரண்டு கியூட்ரான்களுமிருக்கின்றன. சாதாரண யுரேனியத்தில் 92 புரோட்டான்களும், 146 கியூட்ரான்களுமிருக்கின்றன. இதை யுரேனியம் 238 என்று அழைக்கிருேம். யுரேனியம் 235இல் 92 புரோட்டான்களும் 143 கியூட்ரான்களுமிருக்கின்றன. சாட்விக் கண்டுபிடித்த கியூட்ரானும் சைக்ளோட்ரான் என்னும் கருவியும் அணுவைப் பிளக்க உதவுகின்றன. ேஜா லி ே ய்ர். பெர்மி என்ற் விஞ்ஞானிகளிருவரும் கியூட்ரானைக்கொண்டு யுரேனிய அணுக்களைச் சிதைத்து அவற்றை மிகுந்த கதிரியக்கமுள்ள அணுக்களாக மாற்றிஞர்கள். இதையடுத்து ஆட்டோஹான், ஸ்ட்ராஸ்மன் என்னும் விஞ்ஞானிகள் யுரேனிய அணுக்களின் சிதைவால் ஏராளமான ஆற்றலைப் பெறலாமென்று காட்டி க.சோ - 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/146&oldid=881011" இலிருந்து மீள்விக்கப்பட்டது