பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பொங்கல் விழா வித்து வான் திரு. மு. அது சைலம் பிள்ளே மக்கள் பலர் ஒருங்கு கூடி மகிழ்ந்து செய்யும் செயல் களெல்லாம் விழா என்று கூறப்பெறும். வி ழ ா க் க ள் பண்டைக் காலந்தொட்டு நம் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. அவற்றைப் பெருநாள், திருநாள், மங்கலங்ாள் என் வழங்குதலும் உண்டு. அவ்விழாக்கள் எல்லாம் நாடாளும் அரசர் சார்பாகவும், கடவுளரோடு தொடர்பு கொண்டும், ஒவ்வொரு குடும்ப நிகழ்ச்சிகள் குறித்தும், இயற்கையாக நிகழும் பருவ நிலைகளே ஒட்டியும் பெரும்பாலும் நிகழ்வனவாம். i. இயற்கை விழா - இயற்கையாக நிகழும் பருவ நிலைகளே ஒட்டி நடை பெறும் விழாக்களுட் சிறந்தது பொங்கல் விழாவாகும். இது தைத் திங்கள் முதல் நாளில் நாடு’ முழுதும் இக்காலத்திற் கொண்டாடப்பெறுகின்றது. மக்கள் வீடுகளைத் தீற்றியும் திருத்தியும் புதுக்குகின்றனர்; புத்தாடையுடுக்கின்றனர்; புதிதாக விளைந்து வந்த செந்நெல் அரிசியும் கன்னற்கட்டியும் சிறுபருப்பும் நறுநெய்யும் தீம்பாலும் பிறவும் சேர்த்துப் பொங்கல் செய்கின்றனர். ஞாயிற்று மண்டலத்திற்குப் படைத்துப் பிறர்க்கும் வழங்கித் தாமும் உண்டு களிக்கின் றனர். இவற்றை நோக்கும்போது புதிதாகக் கிடைத்த அரிசியைப் பொங்கல் செய்து உண்பதே பொங்கல் விழா என்ற எண்ணம் நமக்கு உண்டாகின்றது. இவ்விழா நெடுங்காலமாக இந்நாட்டில் நடைபெற்று வரும் ஒரு பெருவிழா என்ற நினைவும் உண்டாகின்றது. ஆயினும், பொங்கல் என்னும் இத்துTய தமிழ்ச் சொல் சங்க இலக்கியங் களில் எடுத்தாளப் பெற்றுள்ளதா ? உள்ளதாயின் எ ப் பொருளில் எடுத்தாளப் பெற்றுள்ளது ? இப்பொங்கல் விழா பண்டைத் தமிழகத்திற் கொண்டாடப் பெற்றதா ? என ஆராய்ந்து உண்மை காண முயலுதல் கன் ருகும். இக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/149&oldid=881017" இலிருந்து மீள்விக்கப்பட்டது