பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 "ஆயர்கள் தம் ஆகிரைகளை மேடாகிய முல்லை கிலத்திலே மேயவிட்டு மிக்க குளிர் வருத்துவதால் கையை கெருப்பிலே காய்ச்சி அதற்ைபெற்ற வெப்பத்தைக் கன்னங் களிற் சேர்த்துப் பற்பறை கொட்டி நடுங்குகின்றனர். விலங்குகள் மேய்தலை மறந்து ஓடுகின்றன. மந்திகள் கூனிக் குறுகி நிற்கின்றன. மரங்களில் தங்கும் பறவைகள் வாடை தாங்கமாட்டாமல் நிலத்தில் வீழ்கின்றன. பசுக்கள் குளிர்மிகுதியால் கன்றுகளை உதைத்துத் தள்ளுகின்றன. பூந்தட்டில் வைத்துள்ள பிச்சியரும்புகள் மணங்கமழ்தலால் அந்திப்பொழுது வந்ததென்றறிந்து மகளிர் ம ன க ளி ல் விளக்கேற்றி வைத்து, நெல்லும் மலருங் தூவி இல்லுறை தெய்வத்தை வணங்குகின்றனர். மாடப் புருக்கள் மன்று களிற் சென்று இரை தேடி யுண்ணுமல் கொடுங்கையைத் தாங்கும் பலகைகளில் கடுத்த கால்கள் ஆறும்படி மாறி மாறி இருக்கின்றன. பணிப்பெண்கள் சாந்தரைக்கும் அம்மியில் கத்துாரிக் கலவையை அரைக்கின்றனர். வடநாட்டார் கொண்டுவந்த சக்தனக் கல்லும் தென்றிசைச் சந்தனக் கட்டையும் பயன்படாமற் கிடக்கின்றன. மகளிர் தம் தலையிற் பூமாலை சூடாமல் மங்களமாகச் சில மலர்களையிட்டு முடிக் கின்றனர். மயிர்ச் சந்தனமாகிய விறகிலே நெருப்பை மூட்டி அ தி ல் அகிற்கட்டையையும் கண்ட சருக்கரையையுங் கூட்டிப் புகைக்கின்றனர். வேலைப்பாடமைந்த விசிறிகள் உறைகளுடன் சிலந்திநூல் சுற்றப்பட்டு முளைகளில் துரங்குகின்றன. மேல்மாடங்களில் தென்றல் வருவதற்கு அமைத்த சாளரக் கதவுகள் திறக்கப்படாமல் தாழிட்டுக் கிடக்கின்றன. கல்லென்ற ஓசையையுடைய சிறு துவலையை வாடைக்காற்று எங்கும் வீசுவதால் மக்கள் குளிர்ந்த நீரைப் பருகாமல் கொதிக்கும் நீரைப் பருகுகின்றனர். மலையுச்சியி லிருந்து விழும் அருவிபோல் மாடத்து நிலா முற்றங்களிற் பெய்த மழைநீர் திரண்டு கூடல்வாயின் வழியே ஆரவாரத் துடன் முற்றத்தில் விழுகின்றன. இவ்வாறு கால ம ைழ செறிந்து மலையைக் குளிர்விப்பது போன்ற கூதிர்க் காலமாய் நிலைபெற்றது' என நக்கீரர் நெடுநல் வாடையில் வரைந்து காட்டிய சொல்லோவியத்தின் வாயிலாக அடை மழையும் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/153&oldid=881027" இலிருந்து மீள்விக்கப்பட்டது