பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 குளிர்காற்றுங் கலந்த ஐப்பசி கார்த்திகைத் திங்களின் இயல்புகளையும் அக்காலத்து மக்களும் விலங்குகளும் பறவை களும் அடைந்த வருத்தங்களையும் மனக்கண்ணுற் கண்டோம். சங்க இலக்கியங்களும் பொங்கலும் இனி, அடுத்து வருவது மார்கழியும், தையும் ஆகிய முன்பனிப் பருவமாகும். பொங்கலும் அக்காலத்தேதான் வருகின்றது. அதனைப் பற்றி அறிவதற்கு அப்பொங்கல் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் எடுத்தாளப் பெற் றுளதா ? உள்ளதாயின் எப்பொருளில் எடுத்தாளப் பெற் றுளது ? என்பவற்றை முதலிற் காண்போம். "...............பொங்கல் வெண்மழை அகலிரு விசும்பில் துவலே கற்ப’’ (நெடுங்ல் 19–20) "தைஇ கின்ற தண்பெயற் கடைநாள் வயங்குகதிர் கரந்த வாடை வைகறை விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி மங்குல் மாமழை தென்புலம் படரும் பணியிருங் கங்குல்' (அகம்-24) எனப் பல மேற்கோள்கள் பொங்கல் என்பது பற்றியும் அதன் இயல்புகள் குறித்தும் விளக்கமாகக் கூறுகின்றன. இவற்ருல், பொங்கல் என்பது பொங்கி எழுதலென்னும் தொழிலையுணர்த்தும் ஒரு பெயர்ச்சொல் என்பதும், அது மழை பெய்து ஓய்ந்த வெண்மேகத்திற்கு அடைமொழியாய்ப் புணர்க்கப்பட்டுள்ளதென்பதும், அம்மேகம் மு ன் ப னி ப் பருவத்தின் இடைக்காலமாகிய மார்கழியின் பிற்பகுதியில் தோன்றுமென்பதும், பி ற வு ம் பெறப்பட்டன. இச்சொல் ஒ ேர | வ ழி த் தொழிலாகுபெயராய் வெண்மேகத்தை யுணர்த்தலும் உண்டு. ' இப்பொங்கல் தோன்றினல் மழை பெய்யாது என்பது மக்கள் அனுபவத்திற் கண்ட உண்மையும் நம்பிக்கையுமாகும். ஆதலின், அடைமழையாலும் குளிர் காற்றலும் ஐப்பசித் திங்கள் முதலாக, மேகங்கள் மறைத்தலால் விசும்பைக் கான த-சோ-20 =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/154&oldid=881030" இலிருந்து மீள்விக்கப்பட்டது