பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. திரைப்படத்தால் விளைவது நன்மையா ? - தீமையா? திரு. த. சக்திவேலு. பி. ஏ. . செயலாளர்: எழுத்தறிவிக்கும் இ ைற வர் க ேள என் அன்புக்குரிய நண்பர்களே, உங்களனைவர்க்கும் முதற்கண் என் வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கின்றேன். இன்று நிகழவிருக்கும் நம் மன்றத்தின் சொற்போர் அரங்கிற்கு நடுவராயிருந்து சிறப்புற நடாத்தித் தருமாறு, பேராசிரியர் திரு. நெடுமாறன், எம். ஏ., அவர்களை மாணவர் மன்றத்தின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன். தலைவர் முன்னுரை: பள்ளித் தலைவர்களே, பயிற்றுவிக்கும். ஆசிரிய நண்பர்களே, ம ா ண் பு ைட மாணவர்களே, எல்லீர்க்கும் என் அன்பு கலந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்கின்றேன். இன்று, உங்கள் சொற்போர் அரங்கிற்கு யான் நடுவராய் வீற்றிருப்பதைக் குறித்துப் பெரிதும் மகிழ் கிறேன். திரைப் படத்தால் விளைவது நன்மையா தீமையா என ஈரிருவர் எடுத்தியம்ப இருக்கின்றனர். உங்களைப் போலவே நானும் இவர்தம் சொல்லாற்றலைக் கேட்டு மகிழ விழைகின்றேன். இப்பொருள்பற்றி முதற்கண் நான் ஒன்றுங் கூருதிருப்பதே முறை. அதனல் மாணவர்களைப் பேசுமாறு அழைக்கின்றேன். முதலில் திரு. அறிவுடைநம்பி, திரைப் படத்தால் விளைவது நன்மையே என்று சொற்போரைத் தொடங்கி வைப்பாராக.

அறிவுடைநம்பி : ஒரு பாற்கோடா உயர் பெருந்தகை யாகிய நடுவர் அவர்களே, அறிவு நல்கும் ஆன்ருேரே, மாற்றுக் கட்சி நண்பர்களே, அன்புத் ேத ா ழ ர் க ேள, அனைவரையும் தலை தாழ்த்தி வணங்குகின்றேன். சின்னட் களுக்கு முன்னர் நம் பள்ளியில் காட்டப்பெற்ற படக்காட்சி யைக் காண நாம் அனைவரும் கூடியிருந்தோம். தீமையெனப் பேச முன்வந்துள்ள நண்பர்களும் அன்று முன் வரிசையில் ==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/158&oldid=881039" இலிருந்து மீள்விக்கப்பட்டது