பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 காணமுடியாதனவற்றைக் காண உதவுகிறது என்ற சிறு நன்மையை மட்டும் மனத்திற் கொண்டு, திரைப்படத்தால் நன்மைதான் விளைகிறது என்று வாதிடுவது, சொல்லாற்றலைக் காட்டுமே யன்றி, உண்மையை நிலைநாட்டுவதாகாது. திரைப்படத்தை உண்மை வாழ்க்கையென நம்பி வாழ முற்படுகின்றனர் பலர். சின்னஞ்சிறு வெள்ளை உள்ளங்களில் தீய கருத்துக்களை விதைத்து விடுகிறது திரைப்படம். மாணவர்களும் மற்றவர்களும் திரையுலகக் கலைஞர்களைத் தத்தம் தலைவர்களென எண்ணிக்கொண்டு, பூசல் விளைவித்து வருகின்ற கெடுநிலையையுங் காண்கின்ருேம். இவ்வண்ணம் மக்கள் வாழ்வைச் சீர்குலைத்து வருவது திரைப்படமே ! திரைக் காட்சியே எனக்கூறி முடிக்கின்றேன். வணக்கம். இங்கர்சால் : கன்னெறிபற்றியொழுகும் நடுவர் அவர்களே, நல்லாசிரியப் பெருமக்களே, உண்மைகாணத் துடிக்கும் உயிர்த் தோழர்களே, வலையில் வீழாமல் துடிதுடிப்புடன் வாதிட்ட அன்பரின் கூற்றுக்களுக்கு மறுப்புரை கூற வேண்டிய பொறுப்புள்ள நிலையில் நான் இருக்கிறேன். கல்விப் படக் காட்சியையும் கதை தழுவிய காட்சியையுங் குழப்புவதாக நண்பர் குறை கூறினர். இரண்டுமே திரைப் படங்தான் எனத் தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு அவரை வேண்டிக்கொள்கிறேன். கண்ணுடி போட்டுக்கொள்வதைப் பற்றியும் நண்பர் குறிப்பிட்டார். படங்காணும் ஆர்வத்தால் சிலர், அடிக்கடி பார்ப்பதாலும் வேளைகெட்ட வேளையில் பார்ப்பதாலும் தாமே வலிந்து கண்ணைக் கெடுத்துக் கொள்கின்றனர் என்பதால் திரைப்படத்தின்மேல் பழிபோடக் கூடாது. அ.து உண்மையாயின் பார்ப்பவர் அனைவருக்குமே யல்லவா அக்கேடு நேர்தல் வேண்டும்? நண்பர் பேசும் முறையைக் கூர்ந்து நோக்கின், அவர் தவருமல் படம் பார்த்து வருகிருர் என்பது புலகிைன்றது. திரைப்படத்தால் கண்கெடுவது உண்மையானல், அவரும் கண்ணுடி போட்டுக் கொண்டிருக்கவேண்டும். இந்தச் சமயத்துக் காவாவது அதனை அணிந்துகொண்டு மெய்ப்பித்து இருக்கலாம் (வலுத்த கைதட்டல்). முறையறியார் சிலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/161&oldid=881047" இலிருந்து மீள்விக்கப்பட்டது