பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 முட்டிக்கொண்டும் தள்ளிக்கொண்டும் செல்கின்ருர்கள் என்ருல், அ.து அவர் பண்படா நிலையைக் குறிக்கின்றதே தவிரத் திரைப்படத்தின் தன்மையைக் குறிக்கவில்லை. திரைப் படமா அவ்வாறு கற்பிக்கிறது ? அறிவியல் அறிஞரான எடிசன் பெருமகளுர், இதனைக் கண்டுபிடிக்கப்பட்ட பாட்டினையும் மறந்து, பலரும் ஒன்றுகூடி, அரும்பாடுபட்டுக் கண் துஞ்சாது, திரைப்படத்தை உருவாக்குகின்றனர் என்பதையும் மறந்து, தீமையே விளைகிறது என்று எளிதாகச் சொல்லிவிட்டார் நண்பர். ஒரு நாட்டு மக்களுடைய பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் காலத்தால் அழிந்து போகா வண்ணம் காத்துவைப்பது திரைக்கலையே. நடிப்பு வேறு, நடிகர் வாழ்வு வேறு. நடிப்பதைத்தான் நோக்க வேண்டுமேயொழிய, நடிகர்தம் வாழ்விற் புகுந்து காணக் கூடாது. மனித மன்ம் விழைவது இன்பமொன்றையே. அவ்வின்பத்தை அளிக்கும் கருவிகளில் திரைப்படமே தலைசிறந்து விளங்குகிறது. ஒரு நாட்டின் உயர்வை எடுத்துக் காட்டுவது கலை என்பார்கள். அக் கலை வாழ, வளரத் திரைக்கலை ஓம்பப்படவேண்டும். அனைத்துக் கலைகட்கும் உறைவிடமாக உள்ளது இத்திரைக் கலை ஒன்றே. திரைக் காட்சியால் ஒரிரு தீமையுண்டாவதை முன்னிறுத்தி அக்கலையே தீது என முடிவுகட்டிவிடுவது நேர்மையன்று. தீயை உணவாக்கவும் பயன்படுத்தலாம்; ஒன்றை எரித்துச் சாம்பராக்கவும் பயன்படுத்தலாம். விளைவுகள், பயன்படுத்து வோரைப் பொறுத்ததேயொழிய அத்தீயின் மேலில்லை. எரித்தலைமட்டும் வைத்துக்கொண்டு தீயைப் புறக்கணித்து ஒதுக்கிவிடுவது முறையோ ? அதுபோலக் குறைகளைத் திரைப்படத்தின் மேலேற்றிக் குறைகூறுவது பொருந்தாது. திரைப்படத்தால் அளப்பரிய நன்மைகளை உருவாக்கலாம் என்பது எல்லாராலும் அறியப்பட்ட உண்மையாகும் எனக் கூறி என்னுரைக்குத் திரையிடுகிறேன். வாழ்க திரைக்கலை. வணக்கம். - ஈசுவரமூர்த்தி : நடுநிலை போற்றும் தலைவரவர்களே, அறப்பணி புரிந்தொழுகும் ஆசிரியப் பெருமக்களே, பட்டி மன்றத்துப் பாங்கறிந்தேறிய தோழர்களே, அமெரிக்காவில் த-சோ-21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/162&oldid=881049" இலிருந்து மீள்விக்கப்பட்டது