பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. விபுலானந்தரின் நற்பண்புகள் வித்துவான் திரு. ஆர். பழ நியாண்டி முதலியார் தமிழ்த் தொண்டு ஒவ்வொரு தமிழனும் தம் தாய்மொழிக்குத் தன்னல் இயலும் தொண்டினைச் செய்தல் வேண்டும் என்பது அடிகள் கருத்து. அதனை அவர் பல கூட்டங்களிற் கூறியுள்ளார். அவர் தம் வாழ்க்கையில் அதனைச் செய்து காட்டினர்; தம்மளவில் எல்லாத் தமிழ் நூல்களையும் ஐயங்திரிபறக் கற்ருர்; ஆராய்ந்தறிந்த உண்மைகளை நூல்களாகவும் கட்டுரை களாகவும் வெளிப்படுத்தித் தமிழ் மக்கட்கு உதவினர். இறந்தொழிந்த தமிழ் இசை அறிவை யாழ் நூல் வாயிலாகப் புதுப்பித்தார். இ.து ஒன்றே அப்பெரியார் பெயரை நிலை நிறுத்தப் போதியதாகும். அவர், தம்மைக் காணவரும் தமிழ் நண்பர்களுடன் தமிழ் நூல்களைப் பற்றியே பேசுவார்; அவற்றின் சிறப்பியல்புகளை அவர்கள் மனத்திற் பதிய வைத்துத் தமிழின்பால் பற்றுள்ளங்கொள்ளச் செய்வார். முற்றும் துறந்த முனிவராக இருந்தும் அவர் தாய்மொழி யினிடம் கொண்டிருந்த பற்று அளவிடற்கரியது என்பது அவர் வாழ்க்கையிலிருந்து நாம் நன்கு அறியலாம். அடிகளது தமிழ்நடை செய்யுள் நயம் பொருந்தியது; நல்ல தமிழ்ச் சொற்களைப் பெற்றது; படிக்கப் படிக்க இன்பம் அளிப்பது. அவர், 'தமிழர், சங்க நூல்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அவற்றின் சிறப்பை மேட்ைடாரும் பிறரும் அறியுமாறு செய்ய வேண்டும்' என்று பல சமயங்களிற் கூறியுள்ளார். அடிகளும் மறுமலர்ச்சிக்காரரும் "இக்காலத்தில் எழுவாய், பயனிலைப் பொருத்தங்கூட இல்லாமல் தமிழ் எழுதும் மறுமலர்ச்சிக்காரர் பலரால் தமிழ் நடை வளர்ச்சி பெருது. மறுமலர்ச்சி என்பது தமிழுக்கே சிறப்பாக உண்டான இலக்கண வரம்புகளை மீறி எழுதுவதும் பேசுவதுமாகும் என்று சிலர் கினைக்கின்றனர். பழைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/166&oldid=881057" இலிருந்து மீள்விக்கப்பட்டது